Published:Updated:

`குடிநீருக்கு அலையுறோம்... ஓட்டுக் கேட்டு ஊருக்கு  வரட்டும்!’ - கடுகடுக்கும் மாணிக்கபுரம்  மக்கள்!

`குடிநீருக்கு அலையுறோம்... ஓட்டுக் கேட்டு ஊருக்கு  வரட்டும்!’ - கடுகடுக்கும் மாணிக்கபுரம்  மக்கள்!
`குடிநீருக்கு அலையுறோம்... ஓட்டுக் கேட்டு ஊருக்கு  வரட்டும்!’ - கடுகடுக்கும் மாணிக்கபுரம்  மக்கள்!

"நாங்க பொழுது விடிஞ்சா தினமும் தண்ணீருக்காக அலையுற அலைச்சல் இருக்கே...அதை சொல்லி மாளாது. எந்த அரசியல்வாதியும் எங்க குடிநீர் பிரச்னையை தீர்க்கலை. தேர்தல் நேரத்துல ஓட்டுக் கேட்டு ஊருக்கு யாரேனும் வந்தால்,தக்க பதிலடி கொடுப்போம்" என்று அதிரடியாக பேசுகிறார்கள் மாணிக்கபுரம் கிராம மக்கள்.

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் இருக்கிறது மணிக்கபுரம். 700 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். தினமும் குடிநீருக்காக இவர்கள் பத்து கிலோமீட்டர்கள் வரை பயணிப்பதாக கண்ணீர் வடிக்கிறார்கள். இதுபற்றி,நம்மிடம் பேசிய அந்த ஊர் மக்கள் சிலர்,

"எங்கள் ஊர் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பல வருஷமா அல்லாடி வருகிறார்கள். ஒரு ஆழ்துளை கிணறு எங்களது ஊராட்சி நிர்வாகம் சார்பில் போடப்பட்டது. ஆனால்,அந்த ஆழ்துளை குழியில் தண்ணீர் வரவில்லை. வெறும் காத்துதான் வருது. அதை சரிபண்ண மீண்டும் எந்தவித முயற்சியும் எடுக்கலை ஊராட்சி நிர்வாகம். ஊர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தினமும் காலையில பத்து கிலோமீட்டர் தொலைவில் சென்று அங்கு இருந்து தண்ணீர் எடுத்து வருவதால், மிகவும் சிரமப்படுறாங்க. நாங்களும் மாவட்டக் கலெக்டர் வரை பார்த்து மனு கொடுத்துட்டோம். புண்ணியம் இல்லை. தினமும் குடிநீர் தேடி வண்டி வாகனம், சைக்கிள்லதான் போக வேண்டி இருக்கு. எங்க ஊரில் அன்றாடங்காய்ச்சிகள்தான் அதிகம் வசிக்கிறாங்க. இதனால்,அவங்க வருமானத்தில் பாதி தண்ணீர் தூக்க போக வண்டிக்கு பெட்ரோல் போடவே சரியாபோய்டுது. 

அதோட, பள்ளிச் சிறுவர்கள் தண்ணீர் தூக்க நெடுந்தொலைவு போக வேண்டி இருப்பதால், பள்ளிக்கு பலநாள் தாமதமா போறாங்க. இதனால், அவங்க படிப்புப் பாழாகுது. பெரியவங்களுக்கு அன்றாடம் பொழப்பு போய்டுது. ஒவ்வொரு முறையும் எங்க ஊருக்கு எம்.பி, எம்.எல்.ஏ, உள்ளாட்சித் தேர்தலின் போது ஓட்டுக் கேட்டு வரும் அரசியல்வாதிகள் சொல்லி வச்சாப்புல, `எங்களை ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்சா, முதல் வேளையே குடிநீருக்கு ஏற்பாடு பண்ணுவோம்'ன பேசி ஓட்டை வாங்கிக்குறாங்க. ஆனா, அதுக்குப் பிறகு எங்களைக் கண்டுக்கறதே இல்லை. உடனே, குடிநீருக்கு ஏற்பாடு பண்ணனும். இல்லைன்னா,மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரா போராட்டத்தில் குதிப்போம். அதேபோல்,எங்களின் உரிமை,அ தாவது தேர்தல் வரும்பொழுது ஊருக்குள் வந்தால்,அத்தனை கட்சி ஆள்களுக்கும் தகுந்த பதில் அடி கொடுப்போம். தேர்தலை புறக்கணிக்கவும் செய்வோம்" என்றார்கள்.