Published:Updated:

`இன்னமும் கல்யாணம் பற்றியே யோசிக்கிறார்' - திருநாவுக்கரசரை சாடிய ராஜேந்திர பாலாஜி

`இன்னமும் கல்யாணம் பற்றியே யோசிக்கிறார்' - திருநாவுக்கரசரை சாடிய ராஜேந்திர பாலாஜி
`இன்னமும் கல்யாணம் பற்றியே யோசிக்கிறார்' - திருநாவுக்கரசரை சாடிய ராஜேந்திர பாலாஜி


`70 வயதாகியும் திருநாவுக்கரசர் திருமணம் பற்றியே யோசிக்கிறார்' என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

டெல்லி கரோல் பாக் பகுதியில் தமிழக அரசு சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் விற்பனை நிலையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். இது தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல் நவீன ஆவின் விற்பனை நிலையமாகும். இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு செய்தியாளர்களைச் சந்தித்த ராஜேந்திர பாலாஜி, `அ.தி.மு.க கூட்டணி கொள்கை அடிப்படையிலான கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடும் அ.தி.மு.க சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா என்றார்.

அ.தி.மு.க - பா.ம.க கூட்டணி கட்டாய கல்யாணம் என காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்தவர், அ.தி.மு.க - பா.ம.க இடையே கட்டாய கல்யாணம் கிடையாது. திருநாவுக்கரசருக்கு 70 வயதாகியும் இன்னமும் கல்யாணம் பற்றியே யோசிக்கிறார். இந்தத் தேர்தலுக்குப் பிறகு பல கட்சிகள் காணாமல் போகும் என்றார்.