Published:Updated:

`நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது' - துப்பரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவிய பிரதமர் மோடி!

`நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது' - துப்பரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவிய பிரதமர் மோடி!
News

உத்தரப்பிரதேசம் மாநிலம் கோராப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இதற்கிடையில் பிரயாக்ராஜ் சென்று கும்பமேளாவில் புனித கங்கை நதியில் நீராடி வழிபாடு மேற்கொண்டார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோடி இந்த மக்களின் நலனுக்காக வேண்டிக்கொண்டதாக பதிவிட்டுள்ளார். இந்த வழிபாடுகளுக்குப் பின்னர் கும்பமேளாவை சுத்தம் செய்த துப்புரவுத் தொழிலாளர்களைச் சந்தித்தார்.

`நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது' - துப்பரவுத் தொழிலாளர்களின் பாதங்களைக் கழுவிய பிரதமர் மோடி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒவ்வொரு வருடம் கும்பமேளா நடைபெறும் இடத்தைச் சுத்தமாக வைத்திருக்கும் துப்பரவுத் தொழிலாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடமும் இந்தப் பணியை சிறப்பாக மேற்கொண்ட 5 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். கும்பமேளா நடைபெறும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள உதவிய துப்புரவுத் தொழிலாளர்களின் பாதங்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். கும்பமேளாவில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் புனித நீராட வருகை புரிகின்றனர். அந்த இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை.

பின்னர் பேசிய மோடி, ``துப்புரவுப் பணியாளர்களின் பணிகளை நினைத்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது. எந்தப் பாராட்டையும் எதிர்பார்த்து அவர்கள் இந்தப் பணிகளைச் செய்யவில்லை'' என்றார்

இதுதொடர்பாக வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ``இந்தத் தருணத்தை என் வாழ்நாள் முழுவதும் நான் மதிப்பேன். சுவட்ச் பாரத் கனவை நனவாக்கப் பங்களிப்பு அளிக்கும் ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.