Published:Updated:

நெல்லையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போலி நிருபர் கைது

நெல்லையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போலி நிருபர் கைது
நெல்லையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போலி நிருபர் கைது
நெல்லையில் பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த போலி நிருபர் கைது

நெல்லை: நெல்லையில் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்த பல பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த போலி நிருபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

சாத்தூரை சேர்ந்தவர் பரமசிவம். இவர் தூத்துக்குடியில் நிருபராக பணியாற்றுவதாக பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் பேசுவாராம். இதுமட்டுமல்லாமல் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் சென்று அங்கு பணிபுரியும் பெண்களிடம் செல்போன் எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டு பின்னர் உங்கள் மீது புகார் வந்திருக்கிறது அதை செய்தியாக வெளியிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என கூறி மிரட்டி வந்துள்ளார்.

இதேபோல் நெல்லையில் அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு பல மாதங்களாக செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். அந்த பெண் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார் தந்ததும் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பரமசிவத்தின் எண்ணை தொட்ர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதன்பின்னர் அந்த பெண் இன்ஸ்பெக்டருக்கும் ஒரு மாதமாக பரமசிவம் செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் தாலுகா அலுவலகத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு போன் செய்த பரமசிவம் நெல்லையில் உள்ள உயர்தர ஓட்டல் ஒன்றில் ரூம் போட்டு காத்திருக்குமாறு மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண்ணும் சம்மதிப்பது போல் நடித்து போலீசில் புகார் கொடுத்துவிட்டு வந்துள்ளார். இது தெரியாமல் பரமசிவம் அந்த ஓட்டலுக்கு வந்துள்ளார். அப்போது அங்கே மறைந்திருந்த போலீசார் பரமசிவத்தை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

##~~##
நிருபர் என கூறி மிரட்டிய பரமசிவம் 8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்றும் இதேபோல் பல இடங்களில் பெண்களை குறி வைத்து டார்ச்சர் கொடுத்ததும் தெரியவந்திருக்கிறது.
ஆண்டனிராஜ்