Published:Updated:

தீவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

தீவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு
தீவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: கோவையில் அடுக்குமாடி வணிக வளாகத்தில் தீ விபத்தில் உயிரிழந்த துப்புரவு தொழிலாளி விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு சேர்கான் நிறுவனம் எவ்வித இழப்பீடும் தரவில்லை என கூறி உயிரிழந்த விஜயலட்சுமியின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

தீவிபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடும் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

கோவை அவினாசி சாலையில் லட்சுமி மில் சந்திப்பு அருகே விக்னேஸ்வர் பிளாசா வணிக வளாகத்தில் கடந்த மாதம் 25ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் சிக்கி உடல் கருகி பலியானார்கள். இவர்கள் 4 பேரில் சேர்கான் என்ற பங்கு பரிவர்த்தனை நிறுவனத்தை சேர்ந்த கீர்த்தனா மற்றும் துப்புரவு தொழிலாளர் விஜயலட்சுமி ஆகியோரும் அடக்கம்.

இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு அரசின் சார்பாக 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சேர்கான் நிறுவனம் கிர்த்தனாவிற்கு நிறுவனத்தின் சார்பில் 14 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. ஆனால் துப்புரவு தொழிலாளியான விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு எவ்வித இழபீடும் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜயலட்சுமியின் கணவர் செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியரை இன்று சந்தித்து மனு அளித்தார். அதில் தனது மனைவி 5 ஆண்டுகளுக்கு மேலாக சேர்கான் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளராக பணிபுரிந்தும் ஈ.எஸ்.ஐ., பி.எப். போன்ற எவ்வித பண பலன்களும் கொடுக்காமல் இருந்து வந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

##~~##
மேலும் தனது மனைவிக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் பெற்றுதருவதுடன், அந்த நிறுவனதிடம்ன் இருந்து உரிய இழப்பீட்டை பெற்றுக் கொடுக்கும்படி அந்த மனுவில் கூறியுள்ளார். மேலும் தனது மனைவி மறைவிற்கு பின்பு இது தொடர்பாக யாரையும் சந்திக்க கூடாது என மிரட்டுவதாகவும் சேர்கான் நிர்வாகத்தின் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கருணாகரன் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

ச.ஜெ.ரவி