Published:Updated:

லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது

லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது
லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது
லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது

திருவள்ளூர்: அம்பத்தூர் வட்டாட்சியர் நாகேஸ்வரராவ் அடகு கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவடி பகுதியில் உள்ள அடகு கடை உரிமையாளர் தனது கடை உரிமத்தை புதிப்பிப்பதற்கு வட்டாட்சியரை அனுகியுள்ளனர். அதற்கு வட்டாட்சியர் நாகேஸ்வரராவ் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் தான் உரிமத்தை புதிப்பித்து தர முடியும் என்று சொல்லி இருக்கிறார்.

உடனே இது குறித்து அடகு கடை உரிமையாளர் லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார். அதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுக்களை அடகு கடை உரிமையாளரிடம் கொடுத்து அதை நாகேஸ்வரராவிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார்கள்.

##~~##
அதேபோல் அடகு கடை உரிமையாளரும் அந்த பணத்தை நாகேஸ்வரராவிடம் நேற்று மாலை கொடுத்துள்ளார்.  அப்போது அங்கெ மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகேஸ்வரராவை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் நேற்று இரவு முழுவதும் விசாரணை நடத்தி இன்று காலை கைது செய்தனர்.
மேலும் அவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

கவிமணி