Published:Updated:

முதல்வர் தொகுதியில் காகித ஆலைக்கு விளைநிலங்களை எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு

முதல்வர் தொகுதியில் காகித ஆலைக்கு விளைநிலங்களை எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
முதல்வர் தொகுதியில் காகித ஆலைக்கு விளைநிலங்களை எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருச்சி: முதல்வர் தொகுதியில் அமைக்கப்பட இருக்கும் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு விளை நிலங்களை எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதல்வர் தொகுதியில் காகித ஆலைக்கு விளைநிலங்களை எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முண்டிப்பட்டி ஊராட்சியில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும என தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் அறிவித்தார்.

முதல்வர் தொகுதியில் காகித ஆலைக்கு விளைநிலங்களை எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு

முண்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட கிராமங்களில் சுமார் 1,000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் குழு ஈடுபட்டு வருகிறது. இதற்காக அதிகாரிகள் முண்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை கண்டித்து பல்வேறு விவசாய சங்கங்களும் உள்ளூர் கிராம மக்களும் மணப்பாறை தாலுக்கா அலுவலகம் முன் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

முதல்வர் தொகுதியில் காகித ஆலைக்கு விளைநிலங்களை எடுக்க கிராம மக்கள் எதிர்ப்பு
##~~##
உடனே அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியலை கைவிட்டு, விவசாய சங்க பிரதிநிதிகள் சிலர் மணப்பாறை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
சாதிக்பாட்ஷா

படங்கள்: மணிகண்டன்