Published:Updated:

கடலில் கலக்கும் திரவத்தை சுத்தம் செய்யும் புதிய கப்பல்: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது

கடலில் கலக்கும் திரவத்தை சுத்தம் செய்யும் புதிய கப்பல்: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது
கடலில் கலக்கும் திரவத்தை சுத்தம் செய்யும் புதிய கப்பல்: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது

தூத்துக்குடி: தூத்துக்குடி கடலோர காவல் படை ரோந்து பணிக்காக, கடலில் கலக்கும் எண்ணெய் போன்ற திரவப் பொருட்களையும் சுத்தம் செய்யும் நவீன ரக புதிய கப்பல் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடலில் கலக்கும் திரவத்தை சுத்தம் செய்யும் புதிய கப்பல்: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது

தூத்துக்குடியில் 2009 முதல் கடலோர காவல் படைக்கு சொந்தமான வீரா என்கிற கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த கப்பலின் காலம் முடிந்ததைத் தொடர்ந்து, அதை நிறுத்தி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதற்கு பதிலாக புதிய கப்பல் வைபவ் என்கிற புதிய கப்பல் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடலில் கலக்கும் திரவத்தை சுத்தம் செய்யும் புதிய கப்பல்: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தது

இந்த கப்பலை இன்று செயல்பாட்டுக்காக, தூத்துக்குடி துறைமுக எல்லையில் வைத்து

##~~##
துவக்கி வைக்கப்பட்டது. கடலோர காவல் படை இயக்குனர் அனுராக் தவபனியால் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கடலோர காவல்படை கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. சர்மா, நெல்லை மண்டல டி.ஐ.ஜி. சுமித்தரன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷிஸ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ரக கப்பல், ரோந்து பணி, மீட்பு பணி மட்டுமின்றி, கடலில் கலக்கும் எண்ணெய் போன்ற திரவ பொருட்களை சுத்தம் செய்யும் சிறப்பு அம்சங்களைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ். சரவணபெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்