Published:Updated:

போலி பாஸ்போர்ட்களை கட்டுப்படுத்த புதியமுறை கோவையிலும் அறிமுகம்

போலி பாஸ்போர்ட்களை கட்டுப்படுத்த புதியமுறை கோவையிலும் அறிமுகம்
போலி பாஸ்போர்ட்களை கட்டுப்படுத்த புதியமுறை கோவையிலும் அறிமுகம்
போலி பாஸ்போர்ட்களை கட்டுப்படுத்த புதியமுறை கோவையிலும் அறிமுகம்

கோவை: போலி பாஸ்போர்ட்களை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையை தொடர்ந்து கோவையிலும் மாற்றங்களுடன் கூடிய புதிய பாஸ்போர்ட் வழங்கும் பணி இன்று துவங்கியது. இதன் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தெரிவித்தார்.

போலி பாஸ்போர்ட்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ‘லெட்டர் ஸ்கிரின் இமேஜ்’ என்ற மாற்றங்களுடன் கூடிய புதியமுறை பாஸ்போர்ட் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மண்டலத்தில் இந்த புதியமுறை அமல்படுத்தப்பட்டது. இதை தொடர்ந்து கோவை மண்டலத்திலும் மாற்றங்களுடன் கூடிய புதிய பாஸ்போர்ட் வழங்கும் பணி துவங்கியுள்ளது.

புதிய முறையில் பாஸ்போர்ட் வழங்கும் பணியினை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார். இது தொடர்பாக கோவை மண்டல பாஸ் போர்ட் அதிகாரி சசிகுமார் கூறுகையில், ஏற்கனவே இருந்த பழைய முறை பாஸ் போர்ட்களில் பல தகவல்களை போலியாக சேர்த்து போலி பாஸ்போர்ட்கள் தயாரிக்க வாய்ப்புகள் இருந்து. தற்போதைய புதிய முறையினால் போலி பாஸ்போர்ட்கள் தயாரிக்க முடியாது.

##~~##
இதன் மூலம் போலி பாஸ்போர்ட்டுகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சென்னைக்கு அடுத்த படியாக தற்போது கோவையில் இந்த புதிய முறை பாஸ்போர்ட் வழங்கும் பணி துவங்கியிருக்கும் சூழ்நிலையில் படிப்படியாக அனைத்து மண்டலங்களிலும் புதியமுறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
ச.ஜெ.ரவி