Published:Updated:

`வேட்டி இல்லையா, அப்போ பிரியாணி கொடுங்க'!- ஜெ.பிறந்தநாள் விழாவில் துரத்தப்பட்ட அ.தி.மு.க-வினர்!

`வேட்டி இல்லையா, அப்போ பிரியாணி கொடுங்க'!- ஜெ.பிறந்தநாள் விழாவில் துரத்தப்பட்ட அ.தி.மு.க-வினர்!
`வேட்டி இல்லையா, அப்போ பிரியாணி கொடுங்க'!- ஜெ.பிறந்தநாள் விழாவில் துரத்தப்பட்ட அ.தி.மு.க-வினர்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71- பிறந்தநாள் விழா, திருவண்ணாமலை மாவட்டம்  செங்கத்தில் எம்.பி வனரோஜா தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் அ.தி.மு.க கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாகக் கூறி 500-க்கும் மேற்பட்டவர்கள் அழைத்து வந்துள்ளனர் வனரோஜாவின் ஆதரவாளர்கள். விழாவில் 10 பேருக்கு மட்டும் அமைச்சர் முன்னிலையில் வேட்டி, சேலை கொடுத்துவிட்டு மற்றவர்களுக்கு விழா முடிந்ததும் வேட்டி, சேலை தரப்படும் எனக் கூறி 50 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுத்துள்ளனர். மற்றவர்களுக்கு வேட்டி, சேலை கிடையாது எனக் கூறியுள்ளார் வனரோஜா. 

சரி வேட்டி சேலைதான் கொடுக்கவில்லை. இவ்வளவு நேரம் பசியோடு இருந்ததற்காகப் பிரியாணியாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாமே என்று பிரியாணி பொட்டலம் கேட்டால், டோக்கன் உள்ள 50 பேருக்கு மட்டுமே பிரியாணி கொடுக்கப்படும் மற்றவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே செல்லவும் என எம்.பி.யின் ஆட்கள் மற்றவர்களை வெளியேற்றினர். இதனால் மற்ற தொண்டர்களும் பொதுமக்களும் இதெல்லாம் ஒரு பிழைப்பா  என்று புலம்பிக்கொண்டு வெளியேறினர்.