Published:Updated:

மதுரையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்?

மதுரையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்?
மதுரையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்?

மதுரை: மதுரையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவது சம்பந்தமாக அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குறித்து மட்டுமே ஆலோசனை செய்யப்பட்டதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை மாற்றுவதற்கான ஆலோசனைகள் ஏன் செய்யப்படவில்லை என கல்வியாளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

மதுரையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்?

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தியும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தை முறையாக நடைமுறைபடுத்தி, கண்காணிக்க வேண்டும் என்பதற்காகவும் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் மதுரை பழங்காநத்தம் அரபிந்தோ மீரா பள்ளியில் நடந்தது.

இதில், மாவட்ட டி.இ.இ.ஒ. விஜயலட்சுமி வரவேற்பு நிகழத்த, சிறப்பு விருந்தினராக எஸ்.எஸ்.ஏ.யின், மாநில திட்ட இயக்குனர் முகம்மது அஸ்லம் ஐ.ஏ.எஸ். கலந்து கொண்டு பேசும்போது, ‘‘அரசு எவ்வளவுதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகைகள் செய்தாலும், கட்டாய கல்வி உரிமை சட்டம் நடைமுறையில் இருந்தாலும், அரசு பள்ளிகளுக்கு சமுதாயத்தின் பங்களிப்பும் வேண்டும். இதற்காகத்தான் எஸ்.எம்.சி. (பள்ளி மேலாண்மை குழு) ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயம் செயல்பட வேண்டும்.

மதுரையில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்?

பள்ளியில் அது இல்லை, இது இல்லை என்று சொன்ன காலம் போய்விட்டது. இந்த வருஷம் என்ன பொருட்கள் தேவை, அடுத்த வருஷம் வேறு என்ன வேண்டும் என எஸ்.எம்.சி அனுப்பும் பரிந்துரையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த எஸ்.எம்.சியின் கோரிக்கைகளை தொகுத்து, எங்களுக்கு அனுப்புவார். நாங்கள், மாநில அளவிலாள ஏற்பாடுகளை உடனே செய்வோம். பெற்றோர்களும், ஆசிரியர்களும் அரசு பள்ளியை சிறந்த பள்ளியாக மாற்றுவதற்கு அக்கறை எடுக்க வேண்டும். மாணவர்கள் பாதியில் நிற்கும் வழக்கமே இருக்க கூடாது. இந்த கூட்டத்தில் வேறு எதைப்பற்றியும் பேசாமல், இந்த விஷயத்தைப் பற்றி மட்டும் பேசவும். கல்வித்துறை அதிகாரிகள் இது சம்பந்தமான ஆலோசனைகளை கூறவும்’’ என்றார்.

யுனிசெப்பில் கல்வி ஆய்வாளராக பணியாற்றும், அருணாரத்னம் பேசும்போது,

##~~##
‘‘பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்கும் பெரிய இடைவெளி விழுந்து விட்டது. இதனால் நம் மாணவர்கள் கல்வியில் இருபது வருடம் பின்னோக்கி சென்று விட்டார்கள். அதனால், முன்பு போல பள்ளிகளுக்கும், பெற்றோர்களுக்கும் நெருக்கம் வேண்டும். அதற்கு எஸ்.எம்.சி. கண்டிப்பாக உதவும். ஒரு பள்ளிக்கு சம்பந்தமில்லாத அதிகாரிகள் நிர்வாகம் பண்ணுவதற்கும், அந்த பள்ளியில் பயிலும் பிள்ளைகளின் பெற்றோர்கள் நிர்வாகம் செய்வதற்கு வித்தியாசம் உள்ளது. எனவே வருங்காலத்தில் நம் பிள்ளைகள் சிறந்தவர்களாக உருவாக, அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாணமை குழு அவசியம்’’ என்றார்.

மதுரை மனித உரிமை கல்வி நிலையத்தின் சார்பில் ஹென்றி டிஃபேன், வந்திருந்த கல்வித்துறை அதிகாரிகளிடம் வகுப்பெடுத்தார்.

''தற்போது, தனியார் பள்ளிகளில் அட்மிஷனுக்காக பெற்றோர்கள் காத்து கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதுபோல், எந்த அரசு சட்டங்களையும் மதிக்காமல் கட்டணம் வசூலிப்பது, எல்.கே.ஜி.க்கும் நுழைவுத்தேர்வு வைப்பது, 25 சதவீத ஏழை மாணவர்களுக்கு இடமளிக்காமல் ஏமாற்றுவது என்று அட்டகாசம் செய்யும், தனியார் பள்ளிகளில் மாணவர்கள் அதிகம் சேரும்போது, ஏன் பல சலுகைகள் இருந்தும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்பது பற்றி பேச்சு வார்த்தை நடத்தாமல், பள்ளி மேலாண்மை கமிட்டி அமைப்பதற்காக மட்டும் கூட்டம் நடந்த வேண்டும்.

மேலும் பெற்றோர்கள் யாரையும் கூட்டத்திற்கு அழைக்காதது ஏன் என்றும் தெரியவில்லை. அரசுக்கு கணக்கு காட்டுவதற்காக இப்படி அடிக்கடி கூட்டம் போடுகிறார்களா?'' என கேள்வி எழுப்புகின்றனர் கல்வியாளர்கள்.

செ.சல்மான்.

படங்கள்: பா.காளிமுத்து