Published:Updated:

பவானி எம்.எல்.ஏ. வீடு முற்றுகை

பவானி எம்.எல்.ஏ. வீடு முற்றுகை
பவானி எம்.எல்.ஏ. வீடு முற்றுகை

சேலம்: குன்னம் பஞ்சாயத்தில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு மாதமாக சரியான குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று பவானி எம்.எல்.ஏ. வீட்டை முற்றுகையிட்டனர்.

பவானி எம்.எல்.ஏ. வீடு முற்றுகை

பவானி தொகுதிக்குட்பட்ட குன்னம் பஞ்சாயத்தில் தொடர்ந்து ஒரு மாத காலமாக குடிநீர் சரியாக விநியோகம் செய்யாததால் குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை என்று குன்னம் பஞ்சாயத்துக்குட்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் பவானி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நாராயணன் வீட்டை முற்றுகையிட்டார்கள்.

##~~##
அதை தொடர்ந்து எம்.எல்.ஏ. நாராயணன், உங்கள் பஞ்சாயத்தில் இருந்து இனிமேல் முறையாக தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்கிறேன் என்று உறுதி அளித்ததை அடுத்து அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
வீ.கே.ரமேஷ்