Published:Updated:

எம்.பி. தேர்தலில் காங். தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியை பிடிக்கும்; திருநாவுக்கரசர்

எம்.பி. தேர்தலில் காங். தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியை பிடிக்கும்; திருநாவுக்கரசர்
எம்.பி. தேர்தலில் காங். தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியை பிடிக்கும்; திருநாவுக்கரசர்

புதுக்கோட்டை: வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப் பெரும் பலத்துடன் ஆட்சியை அமைக்கும் என்று திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறார்.

அ.தி.மு.க., எம்.ஜி.ஆர். அ.தி.மு.க., பா.ஜ.க. என பல்வேறு அரசியல் முகங்களை கொண்டவர் அறந்தாங்கி திருநாவுக்கரசர். கடைசியாக காங்கிரசில் கைகோர்த்து அறந்தாங்கி அரசராக வலம் வந்தார். இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் காங்கிரஸ் கோஷ்டிகளை கண்டுகொள்ளாமல் டெல்லிக்கே சென்று அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை வாங்கி வந்தார்.

எம்.பி. தேர்தலில் காங். தனிப்பெரும் பலத்துடன் ஆட்சியை பிடிக்கும்; திருநாவுக்கரசர்

தேர்தல் நெருங்கும் சமயத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் அறந்தாங்கியில் நடந்தது. அப்போது பேசிய அரசரின் ஆதரவாளர்கள், அறந்தாங்கி அரசரின் சொந்த தொகுதி. கடந்த 5 வருடங்களாக தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த உதயம் சண்முகத்திற்கு அரசரால் விட்டுக் கொடுக்கப்பட்ட தொகுதி என உதயம் சண்முகத்தை சீண்டினார்கள்.

இதனால் தி.மு.க.வினர் தேர்தலில் தங்கள் வேலையை காட்ட அரசர் தோல்வியுற்றார். அதிலிருந்து புதுக்கோட்டை பகுதிக்கே தலை காட்டாமல் சென்னையிலேயே இருந்து வந்தார். காங்கிரசும் இவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் அவருடைய ஆதரவாளர்கள் ஆளும் அ.தி.மு.க.வுக்கோ அல்லது தி.மு.க. பக்கமோ போய்விடலாம் என்று வலியுறுத்தி வந்தனர். ஆனால் ஒருமுறை ராகுலை சந்தித்துவிட்டு பிறகு முடிவெடுக்கலாம் என அரசர் அந்த முடிவை தள்ளி போட்டு வந்தார். சமீபத்தில் டெல்லியில் ராகுலை சந்தித்த பின் தற்போது அடிக்கடி புதுக்கோட்டை பக்கம் தலைக்காட்ட ஆரம்பித்துள்ளார் அரசர்.

##~~##
தீவிரவாத எதிர்ப்பு தினமான இன்று புதுக்கோட்டை வந்த அரசர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மீடியாக்களிடம் பேசும்போது, இந்தியாவை ஆளும் தகுதி காங்கிரஸ் கட்சியை தவிர வேறு எந்த கட்சிக்கும் இல்லை. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும் பலத்துடன் ஆட்சியை அமைக்கும் என்றார்.
இதனால் அவரது ஆதரவாளர்கள் தற்போது, அண்ணனுக்கு ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துவிடும் என ஆரூடம் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.
வீ.மாணிக்கவாசகம்