Published:Updated:

லஞ்சம் வாங்கி கைதாகும் தாசில்தார்கள்! திருவள்ளூரில் பரபரப்பு

லஞ்சம் வாங்கி கைதாகும் தாசில்தார்கள்! திருவள்ளூரில் பரபரப்பு
லஞ்சம் வாங்கி கைதாகும் தாசில்தார்கள்! திருவள்ளூரில் பரபரப்பு

லஞ்சம் வாங்கி கைதாகும் தாசில்தார்கள்! திருவள்ளூரில் பரபரப்பு

லஞ்சம் வாங்கி கைதாகும் தாசில்தார்கள்! திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர்: அம்பத்தூர் வட்டாட்சியர் நாகேஸ்வரராவ் அடகு கடை உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கியதாக நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தாசில்தார் லஞ்ச வழக்கில் கைதாகி இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி பகுதியில் உள்ள அடகு கடை உரிமத்தை புதிப்பிக்க, அப்பகுதி தாசில்தார் நாகேஸ்வரராவ் 40 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சம் கேட்டதாக நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று திருள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாசில்தார் திலகம், அதே பகுதியை சேர்ந்த துளசிராம் என்பவரிடம் 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பள்ளிப்பட்டை சேர்ந்த துளசிராம் என்பவருக்கு சொந்தமான நிலம் கே.ஜி. கண்டிகையில் இருக்கிறது. அந்த நிலத்திற்கு செல்வ நிலை சான்றிதழ் (சால்வன்சி சர்டிஃபிகேட்) வங்குவதற்காக பள்ளிப்பட்டு தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளார். வி.ஏ.ஓ, ஆர்.ஐ என அனைவரும் அந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்து ரிப்போர்ட் கொடுத்த பிறகும், சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது குறித்து துளசிராம், தாசில்தார் திலகத்தை அனுகி கேட்டுள்ளார்.

அதற்கு அவர் 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் சர்டிஃபிகேட் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ‘அந்த நிலத்தோட மதிப்பே ஒன்றரை லட்சம் தான். நீங்க இவ்வளோ பணம் கேட்குறீங்களே?’ என துளசிராம் கூறியிருக்கிறார். சரி உனக்காக வேணும்னா 5 ஆயிரம் குறைச்சுக்குறேன் என கூறி 15 ஆயிரம் பணம் கேட்டுள்ளார்.

லஞ்சம் கொடுக்க மணம் இல்லாத துளசிராம், பொறுமையாக இருந்துள்ளார். ஆனால் வட்டாட்சியரே மீண்டும் துளசிராமை தொடர்பு கொண்டு, நாளை காலை 9.30 மணிக்குள்ள என் குவாட்ரஸுக்கு பணம் கொண்டு வரலைன்னா, இனிமே நீ சான்றிதழே வாங்க முடியாது என மிரட்டும் தொணியில் பேசியிருக்கிறார்.

##~~##
இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் சொல்லி இருக்கிறார் துளசிராம். இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய 15 ஆயிரம் ரூபாயை கொண்டுபோய் தாசில்தாரின் குவாட்ரசில் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி.  சிவசங்கர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரை கையும் களவுமாக பிடித்திருக்கிறார்கள்.
மேலும் விசாரணையில், வட்டாட்சியர் திலகத்திற்கு திருமணம் ஆகவில்லை என்றும், அவர் லஞ்சமாக பெறும் பணம் அனைத்தையும், பூண்டியில் உள்ள தன் சகோதரருக்கும், சகோதரரின் குழந்தைகளுக்கும் கொடுத்து விடுவாராம்.
இப்படி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தினமும் ஒரு அரசு அதிகாரி கைது செய்யப்பட்டு வருவது, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளின் வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது.
கவிமணி
அடுத்த கட்டுரைக்கு