Published:Updated:

கள்ளக்காதல் பிரச்னையால் திண்டுக்கல் காவலர் தற்கொலை

கள்ளக்காதல் பிரச்னையால் திண்டுக்கல் காவலர் தற்கொலை
கள்ளக்காதல் பிரச்னையால் திண்டுக்கல் காவலர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் கள்ளக்காதல் பிரச்னையால் போலீஸ்காரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்காதல் பிரச்னையால் திண்டுக்கல் காவலர் தற்கொலை

தேனி மாவட்டம், அல்லிநகரத்தைச் சேர்ந்தவர் சரவணன் (35). இவர் திண்டுக்கல் தாலூகா காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு தேன்மொழி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். சரவணன் மனைவிக்கும், மனைவியின் பெற்றோருக்கும் எப்போதும் அடங்கியே இருப்பாராம்.

கள்ளக்காதல் பிரச்னையால் திண்டுக்கல் காவலர் தற்கொலை

இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரவணனுக்கும், பெண் எஸ்.ஐ. ஒருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுவரை சரவணின் மனைவிக்கு தெரியாமல் இருந்த கள்ளத்தொடர்பு சமீபத்தில் தெரியவந்தது. இதனால் அவர் சரவணனை கண்டித்துள்ளார். தனது மனைவிக்கு இந்தத் தகவல் தெரிந்து விட்டதை எண்ணி சரவணன் மிகவும் மனவேதனையடைந்திருக்கிறார்.

##~~##
இந்நிலையில், கள்ளத்தொடர்பு விஷயத்தை, தனது குடும்பத்தினரிடம் சொல்லப் போவதாக சரவணின் கூறிவிட்டு, தனது மகளை அழைத்துக் கொண்டு தேன்மொழி வெளியே சென்று விட்டார். சரவணன் மட்டும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறர். மனைவிக்கு விஷயம் தெரிந்து குடும்பத்தில் ஏற்பட்ட தகராறில் மனவருத்தத்துடன் இருந்த சரவணனுக்கு, மாமனார், மாமியாருக்கும் தெரிந்தால் இன்னும் அவமானமாக இருக்குமே என்ற எண்ணம் மேலும் வருத்தத்தை அளித்திருக்கிறது.
இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த சரவணன் விஷம் குடித்து இருக்கிறார். வெளியே சென்ற தேன்மொழி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். வெகுநேரம் தட்டியும் கதவு திறக்காததால், சந்தேகம் அடைந்த அவர், அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கின்றனர். வீட்டிற்குள் மயங்கிய நிலையில் சரவணன் கிடந்திருக்கிறார். உடனடியாக அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வரும் வழியிலேயே சரவணன் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி. வனிதா விசாரணை செய்து வருகிறார்.

-ஆர்.குமரேசன்

படங்கள்: வீ.சிவக்குமார்