Published:Updated:

வேலூர் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு பதுக்கல்! பொதுமக்கள் பீதி

வேலூர் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு பதுக்கல்! பொதுமக்கள் பீதி
வேலூர் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு பதுக்கல்! பொதுமக்கள் பீதி
வேலூர் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு பதுக்கல்! பொதுமக்கள் பீதி

வேலூர்: வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அருகே தனியார் மருத்துவமனை ஒன்றின் வளாகத்தில் வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த சம்பவம், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை அடுத்த திருவலம் அருகே எஸ்.எல்.ஆர்.ஐ. என்ற தனியார் மருத்துவமனை இயங்கி வருகின்றது. இந்த மருத்துவமனையில் இருபாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டிருந்தபோது, மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த முட்புதறில் 17 வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தைப் பார்த்து திடுக்கிட்டனர்.

##~~##
இதையடுத்து அவர்கள் மருத்துவமனை நிர்வாக அலுவலர் அகஸ்டினுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் திருவலம் போலீசில் அகஸ்டின் புகார் செய்தார். சம்பவ இடத்திற்க்கு வந்த போலீஸார் அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி, ஆய்வு செய்தனர்.
அந்த வெடிகுண்டுகள் விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும், நாட்டு குண்டு வகையை சார்ந்தது என அய்வில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த வெடிகுண்டுகளை அப்புறப்படுத்திய போலீஸார், அவற்றை பாதுகாப்பாக வெடிக்கச் செய்தனர்.
இது தொடர்பாக திருவலம் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம், திருவலம் பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
-ஏ.சசிகுமார்