Published:Updated:

பிளஸ்-2 தேர்வில் மாநில முதலிட மாணவருக்கு வருவாய் அலுவலர் சங்கம் உதவி

பிளஸ்-2 தேர்வில் மாநில முதலிட மாணவருக்கு வருவாய் அலுவலர் சங்கம் உதவி
பிளஸ்-2 தேர்வில் மாநில முதலிட மாணவருக்கு வருவாய் அலுவலர் சங்கம் உதவி

கிருஷ்ணகிரி: பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நாமக்கல் மாவட்ட மாணவருக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது.

பிளஸ்-2 தேர்வில் மாநில முதலிட மாணவருக்கு வருவாய் அலுவலர் சங்கம் உதவி

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவர் ஜெயசூர்யா, தேர்வில் 1189 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்தார். தனியார் மில் ஒன்றில் பணியாற்றி வந்தார் இவரது தந்தை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் சிக்கியதன் காரணமாக, பிறரின் உதவியின்றி எழுந்து நடமாடக்கூட முடியாத நிலையில் உள்ளார்.

பிளஸ்-2 தேர்வில் மாநில முதலிட மாணவருக்கு வருவாய் அலுவலர் சங்கம் உதவி

எனவே மாணவரின் குடும்பத்தினர் தற்போது, வருமானமின்றி மிகவும் வறுமை நிலையில்

##~~##
உள்ளனர். இதை அறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர், அந்த மாணவருக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டும் தெரிவித்தனர்.
இதுகுறித்து இச்சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் விஜயராகவன், ‘‘மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவரின் குடும்ப நிலைமையை பத்திரிகைகள் மூலம் கேள்விப்பட்டு எங்கள் சங்கத்தால் முடிந்த உதவியை செய்துள்ளோம். மேலும், ஏழ்மை நிலையில் உள்ள அந்த மாணவரின் மேற்படிப்பு செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு எங்கள் சங்கம் சார்பிலும் கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.
இதுதவிரவும், கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் அவ்வப்போது சில சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-எஸ்.ராஜாசெல்லம்