Published:Updated:

காவு வாங்க காத்திருக்கும் மரங்களை அகற்ற வேண்டும்

காவு வாங்க காத்திருக்கும் மரங்களை அகற்ற வேண்டும்
காவு வாங்க காத்திருக்கும் மரங்களை அகற்ற வேண்டும்

தர்மபுரி: வன்முறைக்காரர்கலால் தீ வைத்தும், சேதப்படுத்தப்பட்டும் சாலை ஓரங்களில் பலம் இழந்து நிற்கும் மரங்களை அகற்றம் செய்து சாலையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு வழங்க பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

காவு வாங்க காத்திருக்கும் மரங்களை அகற்ற வேண்டும்

ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் கைதை கண்டித்து கடந்த ஏப்ரல் 31ஆம் தேதியில் இருந்து பா.ம.க.வினர் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக் சாலை ஓர மரங்களை வெட்டி சாய்த்து, சொத்தை ஏற்பட்டு பொந்தாகி இருந்த மரங்களில் பெட்ரோல் குண்டுகளை வீசி கொளுத்தியது, கிளைகளை முறித்துவிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

இதில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் அவ்வப்போது அகற்றம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தீ வைக்கப்பட்டு பாதி எரிந்த நிலையிலும், கிளைகள் முறிக்கப்பட்டும் சேதமாகிய மரங்கள் அப்படியே சாலையோரத்தில் நிற்கின்றன. இந்த மரங்கள் முழுவதும் பலம் இழந்து கிடப்பதால், தற்போதைய பருவ மழைக்கான சூறைக் காற்றால் அடியோடி சாலையில் விழுகின்றன.

நேற்று இரவு அரூரில் இருந்து ஊத்தங்கரை செல்லும் சாலையில் சோரியம்பட்டி பகுதியில் ஒரு புளிய மரம் அடியோடு சாய்ந்ததில் அவ்வழியே வந்த மினி டெம்போ ஒன்று அந்த மரத்தின் அடியில் சிக்கி கொண்டது. இந்த விபத்தில் அரூரை சேர்ந்த அலிபீர் பாவா என்ற 30 வயது இளைஞர் உடல் நசுங்கி பலியானார். இதேபோல் மத்தியம்பட்டி பகுதியிலும் நேற்று ஒரு மரம் அடியோடு சாய்ந்தது.

##~~##
இப்படி ஆங்காங்கே வன்முறைக்காரர்கலால் சேதப்படுத்தப்பட்டு பலம் இழந்து நிற்கும் மரங்கள் சாலையில் செல்வோரை காவு வாங்க காத்து கிடக்கிறது. எனவே தொடரும் மழைக் காலத்தில் காற்று வீசி மரங்கள் சாய்வதன் மூலம் ஏற்படும் விபத்துக்களை தவிற்க, சேதப்பட்ட மரங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
எஸ்.ராஜாசெல்லம்