Published:Updated:

விழுப்புரத்தில் கொலையான பெண் சடலம் 1 மாததிற்கு பிறகு கண்டெடுப்பு...

விழுப்புரத்தில் கொலையான பெண் சடலம் 1 மாததிற்கு பிறகு கண்டெடுப்பு...
விழுப்புரத்தில் கொலையான பெண் சடலம் 1 மாததிற்கு பிறகு கண்டெடுப்பு...

விழுப்புரம்: விழுப்புரம் அருகே, கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட பெண்ணின் சடலத்தை 1 மாதம் கழித்து போலீசார் கண்டுபிடித்திருக்கின்றனர்.

விழுப்புரத்தில் கொலையான பெண் சடலம் 1 மாததிற்கு பிறகு கண்டெடுப்பு...

விழுப்புரத்தை சேர்ந்தவர் சுமதி. கூலி தொழிலாளியான இவர், ஏற்கனவே திருமணமாகி கணவரை இழந்து விட்டார். இவர் கடந்த ஒரு வருடமாக புதுவை மாநிலம், மங்கலத்தில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.

விழுப்புரத்தில் கொலையான பெண் சடலம் 1 மாததிற்கு பிறகு கண்டெடுப்பு...

இந்நிலையில், கடந்த மாதம் சுமதி திடீரென காணாமல் போய் விட்டார். இதையடுத்து

##~~##
சுமதியின் தந்தை மங்கலம் காவல் நிலையத்தில் கடந்த மாதம் 9ஆம் தேதி 'தனது மகளை காணவில்லை' என்று புகார் செய்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சுமதியுடன் செங்கல்சூளையில் வேலைப்பார்த்த விழுப்புரம், மரகதபுரத்தைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் விசாரணை செய்தனர்.
அப்போது, 'சுமதியை கொலை செய்து மரகதபுரம் ஏரிபில் வீசிவிட்டதாக போலீசாரிடம் பிரபு கூறியிருக்கிறார். இதையடுத்த அங்கு சென்ற போலீசார் சுமதியின் பிணத்தை (மண்டை ஓடு, எலும்பு கூடு) கைப்பற்றி, மருத்துவ பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக, பிரபுவை கைது செய்த போலீசார், சுமதியை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்ற ரீதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆ.நந்தகுமார்
படங்கள்:
தே.சிலம்பரசன்