Published:Updated:

எங்க வருமானத்துக்கு ரேஷன் கடையை பிரிச்சு கொடுங்க; கூட்டுறவு வங்கியின் புதிய இயக்குநர்

திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியின் புதிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய ஒரு புதிய இயக்குநர், இங்கே இருக்கிற ரேஷன் கடையை ஆளுக்கு ஒன்னா பிரிச்சு கொடுத்தா நாங்களும் வருமானம் பார்ப்போம் என்று கேட்டது ரேஷன் கடை ஊழியர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த கூட்டுறவு சங்க தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே தலைவர் மற்றும் இயக்குநர் பதவியை பிடித்துள்ளனர். புதிதாக பதவி ஏற்றுள்ள பொறுப்பாளர்கள் செய்யும்  அட்டகாசத்தில் அரண்டு போய் கிடக்கின்றனர் கூட்டுறவு வங்கி பணியாளர்கள்.

பல கூட்டுறவு வங்கிகள் டீக்கு கூட வழியில்லாத நிலையில்தான் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிய தலைவர்கள், தங்கள் அறைக்கு ஏ.சி. போட்டு கொடுங்கள், சோபா செட் போட்டுக் கொடுங்கள் என இம்சையை கொடுத்து வருவதாகவும் புலம்புகின்றனர் வங்கி பணியாளர்கள்.

##~~##
இதில் உச்சகட்டமாக, திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் புதிய பொறுப்பாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது ஒரு இயக்குநர் எழுந்து, ‘‘உள்ளாட்சி தேர்தலில் ஜெயிச்சவங்களுக்கு ஆளுக்கு ஒரு ‘பார்’ எடுத்து கொடுத்தீங்க. அதே மாதிரி நம்ம பேங்குக்கு கட்டுப்பட்ட ரேஷன் கடை 12 இருக்கு. அதை ஆளுக்கு ஒன்னா பிரிச்சுக் கொடுத்தா நாங்களும் வருமானம் பாத்துக்குவோம்’’ என வெளிப்படையாகவே கேட்டதையடுத்து திகிலில் கிடக்கிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.
-ஆர்.குமரேசன்