Published:Updated:

தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து
தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

கோவை: மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் உள்ள தனியார் ஆடை தயாரிப்பு நிறுவன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் ஒரு தனியார் ஆடை தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 700 பெண்கள் உள்பட 1500 பேர் வேலை செய்து வருகிறார்கள். இங்கு டெரி டவல்கள் தாயரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் டெரி டவல்கள் உள்நாட்டு சந்தை மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இந்த தொழிற்சாலையின் கெமிக்கல் ஸ்டோரில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வாக்கில் திடீரென தீ பிடித்து மளமளமென பரவ ஆரம்பித்தது. தீ அருகில் இருந்த இரண்டாவது யூனிட்க்கும் பரவியது. அங்கு ஏற்றுமதிக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த ஏராளமான டெரிடவல் பண்டல்களும் தீயில் எரியத் தொடங்கியது.

இதையடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அனைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் கொழுந்து விட்டு எரிந்தது. இதில் தொழிற்சாலையின் கண்ணாடிகளும் வெடித்து சிதறின.

##~~##
ஒரு கட்டத்தில் தீ கட்டுக்கடங்காமல் போன நிலையில், கோவை வடக்கு, தெற்கு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து மூன்று தீயனைப்பு வண்டிகள் தீயனைப்பு வீரர்களுடன் வந்து தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கில் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. மேலும் இந்த தீ விபத்துக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.