Published:Updated:

சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய கலெக்டர்!

சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய கலெக்டர்!
சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்திய கலெக்டர்!

தூத்துக்குடி: கயத்தாறு அருகே சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தூத்துக்குடி கலெக்டர் தடுத்தி நிறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து தேவர். இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மகள் ஜெயசூர்யா (16). இவர்  தற்பொழுதுதான் 9ஆம் வகுப்பு முடித்திருக்கிறார்.

அதே பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டியன் மகன் அய்யாத்துரை (29). இவர் எம்.ஏ. எம்.எட். படித்து வேலையில்லாமல் இருக்கிறார். காளிப்பாண்டியன் இப்பகுதி அ.தி.மு.க. கிளைச் செயலாளராக இருக்கிறார்.

இந்நிலையில் ஜெயசூர்யாவுக்கும், அய்யாத்துரைக்கும் திருமணம் செய்ய வேண்டும் என

##~~##
பேசி முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த தகவல் கலெக்டர் வரைக்கும் சென்றிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, நேற்று போலீசார் அங்கு சென்று திருமணம் நடத்தக்கூடாது என கூறியிருக்கின்றனர். அதற்கு திருமண கோஷ்டியினர், 'நாங்கள் திருமணம் செய்யவில்லை. நிச்சயதார்த்தம் மட்டும் செய்து கொள்கிறோம்' என கூறியிருக்கின்றனர்.

ஆனால், இன்று திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்திருக்கிறது. இந்நிலையில் கலெக்டர் நிச்சயதார்த்தம் கூட செய்யக்கூடாது எனக்கூறி அதிகாரிகளை திருமணம் நடக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், இன்று நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

எஸ்.சரவணபெருமாள்