Published:Updated:

கவுன்சிலர் கொலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்பா?

கவுன்சிலர் கொலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்பா?
கவுன்சிலர் கொலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்பா?
கவுன்சிலர் கொலையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்பா?

விழுப்புரம்: கவுன்சிலர் கொலைக்கு ஊராட்சி மன்ற தலைவர் தான் காரணம் என கிராம மக்கள் அவரது வீடு மற்றும் வாகனங்களை அடித்து சேதப்படுத்திய சம்பவத்தால் அந்த பகுதியே பதற்றமாக உள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள சு.குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. அ.தி.மு.க.வைச் சேர்ந்த இவர், 2011ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சு.குளத்தூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தலில் வெற்றி பெற்றால் சு.குளத்தூர் கிராம காலனி பகுதியில் கோயில் கட்டித்தருவதாக பாலாஜி வாக்குறுதி அளித்திருந்தார். இரண்டு வருடங்கள் ஆகியும் கோயில் கட்டித்தராததால், சு.குளத்தூர் கிராம 2வது வார்டு கவுன்சிலர் விஸ்வநாதன். ஊர் முக்கியஸ்தர்களுடன் சேர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் கோயில் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டியுள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, விஸ்வநாதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கவுன்சிலர் விஸ்வநாதன், கோயிலை தானே தனியாக கட்டி தீருவேன் என்று பாலாஜியிடம் சவால் விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் 10 பேர் கொண்ட மர்ம கும்பல் விஸ்வநாதனை சராமரியாக வெட்டி கொலை செய்யதுள்ளது.

##~~##
விஸ்வநாதன் கொலைக்கு பாலாஜி தான் காரணம் என்று கூறி பொது மக்கள், பாலாஜி மற்றும் அவரது உறவினர் வீடுகளை சூறையாடினர். பாலாஜிக்கு சொந்தமான டிராக்டர் மற்றும் டாடா ஏஸ் வண்டிக்கும் மக்கள் தீ வைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நூற்றுகணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் எஸ்.பி. மனோகரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி உட்பட 10 பேர் மீது வழக்கு பதிபு செய்து தேடி வருகின்றனர்.
ஆ.நந்தகுமார்