Published:Updated:

முன்னாள் ஐ.ஜி உட்பட 4 போலீஸார் மீது கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

முன்னாள் ஐ.ஜி உட்பட 4 போலீஸார் மீது கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை
முன்னாள் ஐ.ஜி உட்பட 4 போலீஸார் மீது கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை

கோவை: பாசி போரக்ஸ் நிதி நிறுவன நிர்வாக இயக்குனர் கமலவள்ளியை கடத்தி, ரூ.2.95  கோடி பணம் பறித்த வழக்கில் முன்னாள் ஐ.ஜி. பிரமோத் குமார் உள்பட 4 போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

திருப்பூரில் செயல்பட்டு வந்த பாசி போரக்ஸ் நிறுவனம் ஏராளமான முதலீட்டாளர்களிடம் முன்னாள் ஐ.ஜி உட்பட 4 போலீஸ் அதிகாரிகள் மீது கோவை சிபிஐ கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்ரூ.870 கோடி வரை வசூலித்து மோசடி செய்தது. இதையடுத்து இதன் நிர்வாக இயக்குனர்கள் மோகன்ராஜ், கதிரவன், கமலவள்ளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை நடந்து வருகிறது. கதிரவன், கமலவள்ளி ஆகியோர் ஜாமீன் பெற்றனர். மோகன்ராஜ் சிறையில் உள்ளார்.

இந்த மோசடி வழக்கில், புகாரை பெற்று கைது நடவடிக்கை மேற்கொள்ளாமல், மோசடி செய்த நிர்வாக இயக்குனர்களை மிரட்டியும், நிர்வாக இயக்குனர் கமலவள்ளியை கடத்தி சென்றும் போலீசார் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, முன்னாள் ஐ.ஜி பிரமோத்குமார், டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன் ராஜ், சண்முகையா ஆகியோரை கைது செய்தது. 4 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். 4 பேர் மீதும் கோவை சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி ஜோசப் டேவிட் முன்னிலையில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட் டது.

அடுத்த கட்டமாக, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு குற்ற நகல் வழங்கப்படும். தங்கள் மீதான குற்றச்சாட்டை அவர்கள் படிக்க கால அவகாசம் வழங்கப்படும். அதன் பிறகு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை துவங்கும்.

-ச.ஜெ.ரவி