Published:Updated:

பரோட்டாவுக்கு பணம் கேட்ட ஓட்டல் முதலாளி குத்திக் கொலை

பரோட்டாவுக்கு பணம் கேட்ட ஓட்டல் முதலாளி குத்திக் கொலை
பரோட்டாவுக்கு பணம் கேட்ட ஓட்டல் முதலாளி குத்திக் கொலை
பரோட்டாவுக்கு பணம் கேட்ட ஓட்டல் முதலாளி குத்திக் கொலை

விருதுநகர்: ஓட்டலில் பரோட்டா பார்சல் வாங்கி கொண்டு, பணம் கேட்ட முதலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த கஞ்சா வியாபாரி மற்றும் அவரது நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

அருப்புக்கோட்டை திருநகரை சேர்ந்தவர் சொக்கலிங்கம் வயது 56. இவர் விருதுநகர் ரோட்டில் ஒரு சினிமா தியேட்டர் அருகே பரோட்டாக் கடை நடத்தி வருகிறார். அருப்புக்கோட்டை பெரிய தெருவை சேர்ந்தவர் சரவணன் வயது 30 பிரபல கஞ்சா வியாபாரி. இவர் மீது பல்வேறு கஞ்சா வழக்குகள் உள்ளன.

சரவணன் தனது நண்பர் ராஜாவுடன் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு புரோட்டா கடைக்கு வந்தர். அங்கே புரோட்டா மற்றும் சிக்கன் அயிட்டங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவருக்கு பார்சல் கட்டித் தருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டிருக்கிறது.

இதில் கடுப்பான சரவணன், ஓட்டல் முதலாளி சொக்கலிங்கத்திடம் சத்தம் போட்டுள்ளார். சிறிது நேரத்தில் புரோட்டா பார்சல் ரெடியாகவும் அதை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் சரவணன் கிளம்பியுள்ளார். உடனே சொக்கலிங்கம் புரோட்டா மற்றும் சிக்கனுக்கு 200 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

##~~##
இதில் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரவணன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சொக்கலிங்கத்தின் கழுத்தில் குத்தினார். பலத்த காயமடைந்த சொக்கலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார்.உடனே சரவணனும், அவரது நண்பர் ராஜாவும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தகவல் கிடைத்த அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விரைந்து வந்து சொக்கலிங்கத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான கஞ்சா வியாபாரி சரவணன் மற்றும் அவரது நண்பர் ராஜாவையும் போலீசார் தேடி வருகின்றனர்.

எம்.கார்த்தி