Published:Updated:

தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன், நண்பர் கடலில் மூழ்கி பலி

தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன், நண்பர் கடலில் மூழ்கி பலி
தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன், நண்பர் கடலில் மூழ்கி பலி

ராமேஸ்வரம்: தந்தைக்கு திதி கொடுக்க ராமேஸ்வரம் வந்த மகனும், அவரது நண்பரும் கடலில் குளிக்கும் போது மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தைக்கு திதி கொடுக்க வந்த மகன், நண்பர் கடலில் மூழ்கி பலி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது தந்தைக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார். ரமேஷுடன் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நாகேந்திரன், தமிழ்மகன், சோனைமுத்து, சந்திரன், சதீஷ்கண்ணன் ஆகியோரும் ராமேஸ்வரம் வந்துள்ளனர். ரமேஷின் தந்தைக்கு நாளை (சனிக்கிழமை) திதி கொடுக்க வேண்டிருயிருந்ததால் அனைவரும் இன்று காலை தனுஷ்கோடியை சுற்றி பார்க்க சென்றனர். தனுஷ்கோடி ஒத்தபட்டி பகுதிக்கு சென்ற அவர்கள் அனைவரும் கடலில் குளித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் கடல் கொந்தளிப்பாக காணப்பட்டது. அதேபோல் தனுஷ்கோடி கடலும் பலத்த சீற்றத்துடன் தான் இருக்கிறது. இதனை உணராமல் சுற்றுலா வந்தவர்கள் தனுஷ்கோடி கடலில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென கடலில் உருவான ராட்சஷ அலை ரமேஷையும், நாகேந்திரனையும் இழுத்து சென்றது. இதை கண்ட மற்றவர்கள் கடலில் இருந்து கரைக்கு வந்து கூச்சலிட்டுள்ளனர். அவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மீனவர்கள் கடலில் மூழ்கிய இருவரையும் மீட்பதற்காக கடலில் குதித்தனர். ஆனால் அவர்களால் உயிரற்ற சடலமாக தான் ரமேஷையும், நாகேந்திரனையும் மீட்க முடிந்தது. இருவரின் உடலையும் மீட்ட மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.

##~~##
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்த தனுஷ்கோடி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் சந்தானபோஸ் அப்பகுதிக்கு சென்று பலியான இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கடல் கொந்தளிப்பான காலங்களில் சுற்றுலா வருபவர்கள் தனுஷ்கோடி கடலில் குளிப்பதற்கு போலீஸார் அனுமதிப்பதில்லை. ஆனாலும் நீண்ட கடல் பகுதியான தனுஷ்கோடி பகுதியில் போலீஸாரின் கண்ணுக்கு தெரியாத பகுதிகளுக்கு சென்று கடலில் குளிக்கின்றனர். இது போன்ற செயல்களால் தான் உயிரிழப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
இரா.மோகன்

படம்: உ.பாண்டி