Published:Updated:

ரயிலை மறித்த ரயில்வே ஊழியர்களின் குடும்ப பெண்கள்

ரயிலை மறித்த ரயில்வே ஊழியர்களின் குடும்ப பெண்கள்
ரயிலை மறித்த ரயில்வே ஊழியர்களின் குடும்ப பெண்கள்

விருதுநகர்: ரயில்வே ஊழியர்களின் குடியிருப்பில் கடந்த ஒரு மாதமாக தண்ணீர் வராததால், ஆத்திரமடைந்த ரயில்வே ஊழியர்களின் குடும்ப பெண்கள் குருவாயூர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ரயிலை மறித்த ரயில்வே ஊழியர்களின் குடும்ப பெண்கள்

விருதுநகர் ரயில்வே நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே காலணியில், சுமார் 200க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்களின் குடும்பங்கள் இருக்கிறது. ரயில்வே குடியிருப்பில் உள்ள தண்ணீர் தொட்டி மூலம் இந்த வீடுகளுக்கு வாரத்துக்கு மூன்று நாள் தண்ணீர் விநியோகம் நடந்து வந்தது.

இந்நிலையில் அங்குள்ள மோட்டார் ரிப்பேர் ஆனதையடுத்து கடந்த ஒரு மாத காலமாக ரயில்வே காலணியில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் சப்ளை அடியோடு நின்று போனது. இது குறித்து ஊழியர்களின் குடும்பத்தினர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் செய்தனர். ஆனாலும் யாருமே இதை கண்டுகொள்ளாமல் மோட்டார் ரிப்பேர் செய்யப்படாமலே இருந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த ரயில்வே காலணியை சேர்ந்த 100க்கு அதிகமான பெண்கள் இன்று காலை 10.35 மணிக்கு விருதுநகர் ரயில்வே நிலையத்தில் திரண்டனர். அப்போது குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. உடனே ரயிலை மறித்து அவர்கள் கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்ட்னர்.

##~~##
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே உயர் அதிகாரிகள் விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் ரயில் மறியல் போராட்டத்தினால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

எம்.கார்த்தி
படங்கள்:
ஆர்.எம்.முத்துராஜ்