Published:Updated:

மது குடிக்க 200 ரூபாய் கடன்; உயிரை பறித்தது

மது குடிக்க 200 ரூபாய் கடன்; உயிரை பறித்தது
மது குடிக்க 200 ரூபாய் கடன்; உயிரை பறித்தது
மது குடிக்க 200 ரூபாய் கடன்; உயிரை பறித்தது

நெல்லை: மது குடிக்க 200 ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, அந்த பணத்தை திரும்ப பெற போராடியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி வயது 60. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் டாஸ்மாக் மது கடை ஒன்றில் மது குடித்து கொண்டிருந்திருக்கிறார். அப்போது, செல்விபுரத்தை சேர்ந்த சிவகுமார் என்பவர் மது குடிக்க வந்துள்ளார். அவரிடம் போதுமான பணம் இல்லாததால் இசக்கிபாண்டியிடம் கடனாக 200 ரூபாய் பணம் பெற்று மது குடித்துள்ளார்.

அதன்பின்னர் சிவகுமாரை சந்திக்கும் இடங்களில் எல்லாம் இசக்கிபாண்டி அந்த 200 ரூபாய் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். கடந்த 22ஆம் தேதியும் அதேபோல் மதுக்கடையில் வைத்து இசக்கிபாண்டி பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

##~~##
இதில் ஆத்திரம் அடைந்த சிவகுமார், இசக்கிபாண்டியை கீழே தள்ளிவிட்டு அருகில் கிடந்த கல்லை தூக்கி அவரது முகத்தில் போட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிபாண்டி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சிவகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மது கடை நட்பில் கடன் கொடுத்த விவகாரம் முதியவர் ஒருவரின் உயிர் பறிபோக காரணமான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டனிராஜ்