Published:Updated:

கடல்நீரை, குடிநீராக்கும் ஊழியர்களுக்கு அடிஉதை: மீனவர்கள் ஆவேசம்!

கடல்நீரை, குடிநீராக்கும் ஊழியர்களுக்கு அடிஉதை: மீனவர்கள் ஆவேசம்!
கடல்நீரை, குடிநீராக்கும் ஊழியர்களுக்கு அடிஉதை: மீனவர்கள் ஆவேசம்!

காஞ்சிபுரம்: கடல் நீரை குடிநீராக்கும் ப்ளான்டின் உவர் நீர் வெளியேறும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் தேங்கியதால் ஆத்திரமடைந்த மீனவர்கள் ப்ளான்டில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களை அடித்து விரட்டினர்.

கடல்நீரை, குடிநீராக்கும் ஊழியர்களுக்கு அடிஉதை: மீனவர்கள் ஆவேசம்!

தென்சென்னை மக்கள் குடிநீர் பிரச்னையை சாமாளிப்பதற்காக, சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சூளேரி காட்டுக்குப்பத்தில் உள்ள ப்ளான்ட் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி முதல்வரால் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதன் மொத்த மதிப்பு 908.28 கோடி. அதில் மத்திய அரசின் மானியம் 871 கோடி.

கடல்நீரை, குடிநீராக்கும் ஊழியர்களுக்கு அடிஉதை: மீனவர்கள் ஆவேசம்!

இந்த திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுகின்றது என அப்பகுதி மீனவர்கள் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து போராடி வருகின்றனர். கடந்த டிசம்பரில் நடந்த சோதனை ஓட்டத்தில் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட உவர்நீரால் கடலில் உள்ள மீன்கள் செத்து மிதந்தது. அப்போதும் மீனவர்கள் போரட்டம் நடத்தினார்கள்.

கடல்நீரை, குடிநீராக்கும் ஊழியர்களுக்கு அடிஉதை: மீனவர்கள் ஆவேசம்!
##~~##

இந்த நிலையில் இன்று காலை உவர்நீர் செல்லும் குழாய் உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. மீனவர்கள் படகு நிறுத்தும் இடத்தில் உவர்நீர் தேக்கமடைந்ததால் மீனவர்களின் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்ததாக மீனவர்கள் ஆவேசம் அடைந்தனர். இதனால் அப்பகுதி மீனவர்கள் ஒன்று திரண்டு ப்ளான்ட் உள்ளே சென்றனர்.

அங்கு வேலை செய்த ஊழியர்களை அடித்து வெளியேற்றினார்கள். பிறகு அந்த ப்ளான்ட் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்டம் அதிகரித்தது. காஞ்சிபுரம் எஸ்.பி. சேவியர் தன்ராஜ் தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. செல்லப்பா தலைமையில் வந்த அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து 60 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தற்போது சூடாக இருக்கிறது சூளேரி காட்டுக்குப்பம்!

-பா.ஜெயவேல்