Published:Updated:

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா!

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா!
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா!

துத்துக்குடி: திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவில், உவரி சுயம்புலிங்கசுவாமி திருக்கோவில்களில் வைகாசி விசாகத்திருவிழா கோலாகலமாக நடந்தது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடான திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் வருடந்தோறும் வைகாசி விசாகத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். வைகாசி விசாக நட்சத்திரம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமாகும். இன்றைய தினம் முருகனை வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்டதற்குறிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். எனவே இந்த விழாவிற்கு நாடு முழுவதிலிருந்தும் ஏராளமான மக்கள் கூடுவார்கள்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா!

அதேபோல் இந்த ஆண்டு, கடந்த 15ஆம் தேதி வைகாசி விசாகத்திருவிழா

##~~##
தொடங்கியது. 10ஆம் திருநாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. காலை 9.00 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 1.30 மணிக்கு விஸ்பரூபதரிசனம், 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. மாலை 4.00 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்க இருக்கிறது.
இரவு சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி முனிகுமாரர்களுக்கு சாபவிமோசனம் நடக்கிறது. நாளை அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்பரூப தரிசனம், 5.00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடக்க இருக்கிறது.
இதேபோல் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவிலிலும் இன்று வைகாசி திருவிழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்திருக்கிறார்கள். இவ்விழாக்களை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருக்கிறது.
-எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்:
ஏ.சிதம்பரம்