Published:Updated:

கேட்பாரற்றுக் கிடக்கும் போதைப்பொருள்கள் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலட்சியம்!

கேட்பாரற்றுக் கிடக்கும் போதைப்பொருள்கள் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலட்சியம்!
கேட்பாரற்றுக் கிடக்கும் போதைப்பொருள்கள் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலட்சியம்!

திருப்பூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், மாவட்ட ஆட்சியரகத்தில் பாதுகாப்பில்லாமல் வைக்கப்பட்டுள்ளதால் மர்ம நபர்கள் அதைத் திருடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தைச் சேர்ந்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது கடைகளில் ஆய்வு நடத்தி, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணித்து வருகிறார்கள். அப்படியான ஆய்வின் மூலம் பறிமுதல் செய்யப்படும் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை, மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, பின்னர் அழிக்கப்படுவது வழக்கம்.

இந்தநிலையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்கள், இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலகத்தின் வெளியிலேயே சீல்கள் உடைக்கப்பட்டு சிதறிக் கிடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும், அப்பகுதி வழியே செல்லும் நபர்கள் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் எந்தவொரு பாதுகாப்பற்றும் கிடந்தது. மாவட்டப் பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டுக் கொண்டுவரும் போதைப் பொருள்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மாவட்ட ஆட்சியரகத்திலேயே  பாதுகாப்பற்ற முறையில் கிடப்பது பெரும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது.