Published:Updated:

சென்னையில் ஜெயில் வார்டனுக்கு வெட்டு!

சென்னையில் ஜெயில் வார்டனுக்கு வெட்டு!
சென்னையில் ஜெயில் வார்டனுக்கு வெட்டு!

சென்னை: நீதிமன்றத்தில் ஆஜராக வந்த அழைப்பை, குற்றவாளியிடம் கொடுக்க சென்ற வார்டன் வெட்டப்பட்டார்.

##~~##
சென்னையை, ராயப்பேட்டை, அம்மா தோட்டத்தைச் சேர்ந்த கொலைக் குற்றவாளி நிர்மல். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான அழைப்பு வந்திருக்கிறது.
அந்த அழைப்பிற்கான கடிதத்தை கொடுப்பதற்காக சிறை வார்டன் விஜயகுமார், நிர்மலிடம் சென்றிருக்கிறார். அப்போது திடீரென, குற்றவாளி நிர்மல், விஜயகுமார் மீது பாய்ந்து அவரது கழுத்தை வெட்டியிருக்கிறான்.
இதில் படுகாயம் அடைந்த வார்டன் விஜயகுமார் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.