Published:Updated:

பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி

பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி
பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் பலி

பெரம்பலூர்: பெரம்பலூரில் கோவில் தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாதாங்கி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த ஏழு நாட்களாக திருவிழா நடந்து வருகிறது. கோயில் திருவிழாவின் 8ஆம் நாளான இன்று தேர் திருவிழா நடபெற்றது.

தேரோட்டத்தை கான சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து தேருடன் வீதியுலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தில் தேரின் சக்கரத்தில் சன்னகட்டை போடும்போது தேர் திடீரென சாய்ந்தது.

இதில் தேரின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அருகேயுள்ள திம்மெச்சூரைச் சேர்ந்த கோபாலக்கண்ணன் என்பவர் இறந்தார். நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

##~~##
பெரம்பலூரில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருவதால் மீட்பு நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டது.
ஆனந்தகுமார்