Published:Updated:

கடற்கரை கனிமங்கள் கடத்தப்பட்டதாக வி.வி.மினரல் சகோதரர் நிறுவனத்துக்கு அபராதம்

கடற்கரை கனிமங்கள் கடத்தப்பட்டதாக வி.வி.மினரல் சகோதரர் நிறுவனத்துக்கு அபராதம்
கடற்கரை கனிமங்கள் கடத்தப்பட்டதாக வி.வி.மினரல் சகோதரர் நிறுவனத்துக்கு அபராதம்

தூத்துக்குடி: அனுமதியின்றி கடற்கரை கனிமங்கள் எடுக்கப்பட்டதாக வி.வி மினரல் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜனின் சகோதரருக்கு சொந்தமான பி.எம்.சி. நிறுவனம் மீது மூன்று கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே படுக்கப்பத்து பகுதியில் கடற்கரை மணல் திருட்டு போவதாக மாவட்ட கலெக்டர் ஆஷிஸ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் வருவாய்துறை, கனிமவளத்துறை, காவல்துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டு வந்தனர். இதில் 4 லட்சத்து 91 ஆயிரத்து 201 கன மீட்டர் அளவுகள் கடற்கரையில் மணல் அள்ளப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

##~~##
அந்த இடத்தில் ஒரு லட்சத்து 980 கன மீட்டர் அளவில் கார்னட், இலமனைட் போன்ற பெருங்கனிமங்களும், 3 லட்சத்து 70 ஆயிரத்து 228 கன மீட்டர் அளவுக்கு செம்மண்ணும் கடத்தப்பட்டிருந்தது. இது தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் சட்டப்படி குற்றமாகும்.
இந்த மணல் கடத்தலில் ஈடுபட்டது, திசையன்விளை வி.வி.மினரல் உரிமையாளரின் சகோதரருக்கு சொந்தமான மி.எம்.சி நிறுவனம்தான் என கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் மீது சுமார் 3 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரத்து 250 ரூபாய் வரையிலும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் பரிந்துரை செய்ததன் பேரில் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்று அனுமதி வழங்கப்படாத இடத்தில் கனிம பொருட்கள் கடத்தப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கலெக்டர் எச்சரித்திருக்கிறார்.
-எஸ்.சரவணப்பெருமாள்