Published:Updated:

மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கைது

மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கைது
மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கைது
மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கைது

மதுரை: மதுரை மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஜெயராம் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவியேற்றதில் இருந்து மதுரை மாவட்ட தி.மு.க. புள்ளிகளை தவணை முறையில் கைது செய்து வருகிறது போலீஸ். இந்நிலையில் மதுரை தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமையும் கைது செய்துள்ளனர் போலீசார். சில நாட்களுக்கு முன் செல்லூர் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, ஜெயராம் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர் திலகர் திடல் போலீசார்.

##~~##
தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. அரசு போடும் பொய் வழக்குகளில் இதுவும் ஒன்று என்று ஜெயராமின் ஆதரவாளர்கள் கூறினார்கள். மேலும், வருகின்ற ஜூன் 5ஆம் தேதி மதுரை மாவட்ட தி.மு.க.வின் சார்பில் ஸ்டாலினிடம் தேர்தல் நிதியளிக்கும் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை ஜெயராமன்தான் தீவிரமாக செய்து வந்தார். இக்கூட்டத்தை பிசுபிசுப்பிக்க வைப்பதற்காக ஆளுங்கட்சி இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக உடன் பிறப்புகள் கூறுகிறார்கள்.

ஆனால், அழகிரி தரப்பினர் ஜெயராமன் கைது சம்பவத்தை மகிழ்சியாக வரவேற்றுள்ளனர்.

செ.சல்மான்
படம்:
பா.காளிமுத்து