Published:Updated:

அ.தி.மு.க., தி.மு.க. இணைந்து தொடங்கி வைத்த சேலம்-கரூர் ரயில்

அ.தி.மு.க., தி.மு.க. இணைந்து தொடங்கி வைத்த சேலம்-கரூர் ரயில்
அ.தி.மு.க., தி.மு.க. இணைந்து தொடங்கி வைத்த சேலம்-கரூர் ரயில்

சேலம்: சேலத்தில் இன்று நடந்த சேலம்-கரூர் ரயில் சேவை தொடக்க நிகழ்ச்சியில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அ.தி.மு.க., தி.மு.க. இணைந்து தொடங்கி வைத்த சேலம்-கரூர் ரயில்

சேலம், நாமக்கல், கரூர் மக்களின் பல ஆண்டுகால கனவாக இருந்தது சேலம்-கரூர் ரயில். இதற்கான திட்டம் 1997-98 பட்ஜெட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. 1997ல் அப்போதைய பிரதமர் தேவேகவுடா சேலம் ஜங்ஷனில் அடிக்கல் நாட்டினார்.

அ.தி.மு.க., தி.மு.க. இணைந்து தொடங்கி வைத்த சேலம்-கரூர் ரயில்

அதன் பிறகு 346.71 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, 85 கிலோ மீட்டர் அகல ரயில் பாதை ரூ.850 கோடி செலவில் அமைக்கப்பட்டது. 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த பணி, மத்தியில் ஆட்சி மாற்றம், சேலம் ரயில்வே கோட்டப் பிரச்னை என தோய்வு ஏற்பட்டது. இதற்காக எம்.பிக்களும் நாடாளுமன்றத்தில் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த மாதம் சரக்கு ரயில் செல்ல சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு பாதையின் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டது. இதற்கு பிறகும் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதையடுத்து ராசிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் உடனடியாக சேலம்-கரூர் ரயிலை விடவில்லை என்றால் உண்ணாவிரம் இருப்பேன் என அறிவித்தார்.

அ.தி.மு.க., தி.மு.க. இணைந்து தொடங்கி வைத்த சேலம்-கரூர் ரயில்

இதையடுத்து மத்திய ரயில்வே வாரியம் சார்பில் இன்று சேலம்-கரூர் பயணிகள் ரயில் தொடக்க விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க.வை சேர்ந்த சபாநாயகர் தனபால், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எம்.பி. செம்மலை, கே.வி.ராமலிங்கம், தங்கமணி, தம்பிதுரை, எஸ்.கே.செல்வம் என அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க., தி.மு.க. இணைந்து தொடங்கி வைத்த சேலம்-கரூர் ரயில்

தி.மு.க. சார்பில் கே.பி.ராமலிங்கம், ஆதிசங்கர் எம்.பி. ஆகியோர் வந்திருந்தனர். இதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க.வினர் இரு தரப்பினரும் அவரவர் கட்சி கொடிகளை காட்டி கோஷம் போட்டார்கள். இதனால் அங்கு பதற்றம் பற்றிக் கொண்டது. இதையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள்.

##~~##
இறுதியாக தி.மு.க., அ.தி.மு.க. கொடிகளை ஒன்றாக காட்டி வழி அனுப்பி வைத்தார்கள். ரயிலிலேயே தி.மு.க.வை சேர்ந்த எம்.பி. ராமலிங்கமும், ஆதிசங்கரும் சென்றார்கள்.

இந்த ரயில் 27ஆம் தேதி முதல் தினமும், காலை 6 மணிக்கு சேலத்தில் இருந்து கிளம்பி, 8 மணிக்கு கரூர் சென்றடையும். மீண்டும் 8.20க்கு கரூரில் இருந்து கிளம்பும் ரயில், 10.20 மணிக்கு சேலம் சென்றடயும். அதேபோல் மாலை 5.30 மணிக்கு கிளம்பி, 7.30க்கு கரூர் சென்றடையும் இந்த ரயில், 7.50க்கு அங்கிருந்து கிளம்பி 9.50 மணிக்கு சேலம் வந்தடையும்.

தினமும் இயங்கும் சேலம்-கரூர் ரயில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்காது. சேலத்தில் இருந்து கரூர் செல்வதற்கு பஸ்ஸில் ரூ.60 கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் இந்த ரயிலில் கட்டணமாக ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

-வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்