Published:Updated:

தஞ்சை அருகே வல்லத்தில் பஸ் கவிழ்ந்து 32 பேர் படுகாயம்

தஞ்சை அருகே வல்லத்தில் பஸ் கவிழ்ந்து 32 பேர் படுகாயம்
தஞ்சை அருகே வல்லத்தில் பஸ் கவிழ்ந்து 32 பேர் படுகாயம்

திருச்சி: திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வந்த தனியார் பேருந்து வல்லம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்ததில் 32 பயணிகள் காயமடைந்தனர்.

தஞ்சை அருகே வல்லத்தில் பஸ் கவிழ்ந்து 32 பேர் படுகாயம்

திருச்சியிலிருந்து தஞ்சையை நோக்கி ஸ்ரீலட்சுமி என்ற தனியார் பேருந்து சுமார் 60 பயணிகளுடன் இன்று காலை புறப்பட்டது. சுமார் 11 மணயளவில் வல்லம், பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தபோது, ஏர்போட்டில் போர் விமானங்களின் ஒத்திகை நடந்து கொண்டிருந்தது.

தஞ்சை அருகே வல்லத்தில் பஸ் கவிழ்ந்து 32 பேர் படுகாயம்

அப்போது வந்த வழியாக பஸ்ஸின் டிரைவர் தாழ்வாக பறந்து கொண்டிருந்த

##~~##
விமானங்களை வேடிக்கை பார்த்தவாறு பஸ்சை ஓட்டினாராம். இதில் பஸ் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த 40 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 32 பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த 22 ஆண்கள், 9 பெண்கள், 1 கைக்குழந்தை ஆகியோர் தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பஸ் கவிழும்போது, டிரைவர் குதித்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்தில் நடத்துனருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான டிரைவரையும் தேடி வருகின்றனர்.

-கே.குணசீலன்