Published:Updated:

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது
டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது

விருதுநகர்: டாஸ்மாக் கடையில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது

கோவில்பட்டியை சேர்ந்தவர்கள் முருகன், மாரியப்பன் மற்றும் பாக்கியராஜ். இவர்கள் மூவரும் இன்று மதியம் 2 மணியளவில் விருதுநகர் எம்.ஜி.ஆர். சிலை அருகே உள்ள டாஸ்மாக் கடையில் 500 ரூபாயை கொடுத்து மதுபானம் கேட்டுள்ளனர்.

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 3 பேர் கைது

அவர்கள் கொடுத்த நோட்டில் சந்தேகம் அடைந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் அதை சரி பார்த்துள்ளனர். அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்துள்ளது. உடனே மூன்று பேரையும் பிடித்து விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

##~~##
போலீசார் விசாரணையில், ஏற்கெனவே எம்.ஜி.ஆர் சிலை அருகில் உள்ள ஒரு ஓட்டலில் 1,000 ரூபாய் கள்ள நோட்டை இவர்கள் கொடுத்து சாப்பிட்டுவிட்டு மீதி பணத்தையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எம்.கார்த்தி

படம்: ஆர்.எம்.முத்துராஜ்