Published:Updated:

மோசடி வழக்கில் தேடப்பட்ட டி.டி மருத்துவ கல்லூரி தலைவர் கைது

Vikatan Correspondent
மோசடி வழக்கில் தேடப்பட்ட டி.டி மருத்துவ கல்லூரி தலைவர் கைது
மோசடி வழக்கில் தேடப்பட்ட டி.டி மருத்துவ கல்லூரி தலைவர் கைது

திருவள்ளூர்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்துவந்த டி.டி. மருத்துவ கல்லூரி தலைவர் டி.டி. தீன்தயாள் நாயுடுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நோவல் குமார் அகர்வால் என்பவர் திருவள்ளூர் எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் திருவள்ளூர் மாவட்டத்தில் டி.டி. மருத்துவ கல்லூரி நடத்தும் டி.டி. தீன்தயாள் நாயுடு, என்னிடம் அவருடைய கல்லூரிக்கு தேவையான 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஃபர்னீச்சர்களை வாங்கினார்.

மோசடி வழக்கில் தேடப்பட்ட டி.டி மருத்துவ கல்லூரி தலைவர் கைது

ஆனால் அதற்கான பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார். அவரை கைது செய்து என் பணத்தை பெற்று தர வேண்டும் என புகார் கொடுந்திருந்தார். இந்த வழக்கின் பேரில் திருவள்ளூர் டவுன் டி.எஸ்.பி பாலச்சந்திரன் தலைமையிலான 10 பேர் கொண்ட போலீஸ் குழு தீன்தயாள் நாயுடுவை தேடிவந்தனர்.

##~~##
அவர் டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து டெல்லிக்கு விரைந்து சென்ற போலீசார் டி.டி. தீன்தயாள் நாயுடுவை கைது செய்துள்ளனர். நேற்று காலை டெல்லியில் அவரை கைது செய்த போலீசார் இரவு திருவள்ளூருக்கு அழைத்து வந்தனர்.
தீன்தயள் நாயுடுவை இன்று திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர். மேலும் அவர் மீது குண்டாஸ் போடுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

-கவிமணி
படம்:
எஸ்.கிருஷ்ணமூர்த்தி