Published:Updated:

விபத்து மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

Vikatan Correspondent
விபத்து மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
விபத்து மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி: அம்மாமண்டபம் அருகே நேற்று தறிகெட்டு ஓடிய பேருந்து சிக்னலுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதிய சம்பவத்தில் 2 பேர் பலியாக, 3 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

நேற்று மாலை 5.30 மணியளவில் முதல்வரின் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே காவிரி பாலம் வழியாக சமயபுரம்கோவில் சென்ற அரசுப்பேருந்து ஒன்று பிரேக் பிடிக்காமல் தறிகெட்டு ஓடி அம்மாமண்டபம் சாலையில் சிக்னலுக்காக காத்திருந்த கூட்டத்தில் புகுந்ததால் சம்பவ இடத்தில் ஓருவர் உயிரிழந்தார். ஐந்து பேர் மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட அங்கே சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழக்க, மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

விபத்து மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்வு ஒன்று திருச்சி மக்களின் ரத்தத்தினை உறைய வைத்தது. திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சுந்தர்ராஜ். இவர் வழக்கம்போல சத்திரம் பகுதியில் இருந்து திருநெடுங்குளம் பகுதிக்கு பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். காந்தி மார்கெட் பகுதியில் இருந்து காட்டூர் வரை முன்னாள் சென்ற லாரி ஒன்று தன் பேருந்துக்கு வழிவிடாமல் சென்றுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜ், காட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே லாரியை முந்திசென்று லாரி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி லாரி ஓட்டுநர் கீழே நின்று பேசிக்கொண்டிருந்த பஸ் டிரைவர் சுந்தர்ராஜின் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியை ஏற்றிக் கொன்றுவிட்டு சென்றுவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த பேருந்தில் பயணம் செய்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து லாரியை தூவாக்குடி சுங்க சோதனைச்சாவடி அருகில் போலீசார் மறித்து லாரி ஓட்டுனர் முகமது காசிம்மை கைது செய்தனர்.

விபத்து மரணங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன் காலை நேரத்தில் சாலையில் தாறுமாறாக ஒடிய தனியார் பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழக்க, 3 பேர் படுகாயம் அடைந்தனர். பிரபல திரையங்கம் அருகே நடந்த இந்த விபத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்தின் கண்ணாடியை உடைத்து மறியலில் ஈடுபட்டதுடன், பேருந்தை எரிக்க முயற்சித்தனர். இந்தையடுத்து அங்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இந்த சம்பவத்தில் அ.தி.மு.க. பிரமுகர் சக்க்திவேல் என்பவர் இறந்ததால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

அடிக்கடி  ஏற்படும் விபத்து மரணங்கள் பற்றி ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர் நடராஜ் நம்மிடம் பேசும்போது, அரசு பேருந்துகள் பொதுமக்களின் சேவையை கருத்தில் கொண்டு பாதுகாப்பான பயணத்தை லாபநோக்கு இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. சென்னை, மதுரை போன்ற பகுதிகளில் உள்ளது போல தனியார்பேருந்துகளை மாநகராட்சி எல்லைப்பகுதிகளுக்கு இயக்க தடைவிதிக்க வேண்டும்.

60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் தனியார் பேருந்துகளாலேயே ஏற்படுகின்றன. அவர்கள் கலெக்ஷன் கிடைக்க வேண்டும் என்பதால் அதிவேகமாக பேருந்தை ஒட்டி செல்கின்றனர். சாலையில் செல்வோரை மிரளச்செய்யும் வகையில் ஓசை எழுப்புவது, பேருந்து நிறுத்தம் மட்டும் இன்றி கண்ட இடங்களில் பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவது போன்ற பல்வேறு காரணங்களால் தான் அடிக்கடை விபத்துக்கள் நடக்கின்றன. ஆகவே மாநகராட்சி பகுதிகளில் உடனடியாக தனியார் பேருந்துகளை தடை செய்யவேண்டும் என்றார்.

##~~##
போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறுகையில், போக்குவரத்து விதிகளை மீறும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களால் முடிவதில்லை. தனியார் பேருந்து முதலாளிகளில் பலர் அரசியல் வாதிகளுக்கு பினாமியாக இருப்பதாலும், பல பேருந்துகள் அரசியல்வாதிகளின் உறவினர்கள் பெயரில் இருப்பதாலும் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. காவல்துறை பதவியில் இருப்பவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டாலே இந்த பிரச்சனைகளை முடிந்தளவு தடுத்துவிடலாம் ஒழுங்காக பணியாற்ற எங்கே விடுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள் என்றார்.
திருச்சியில் அடிக்கடி ஏற்படும் விபத்து மரணங்கள், இனி நடக்காமல் இருக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ப்ரீத்தி கார்த்திக்