Published:Updated:

திருப்பாச்சி அரிவாள் தயாரிக்க போலீஸ் திடீர் தடை

Vikatan Correspondent
திருப்பாச்சி அரிவாள் தயாரிக்க போலீஸ் திடீர் தடை
திருப்பாச்சி அரிவாள் தயாரிக்க போலீஸ் திடீர் தடை
திருப்பாச்சி அரிவாள் தயாரிக்க போலீஸ் திடீர் தடை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அரிவாள்களுக்கு புகழ் பெற்ற ஊர். இங்கு இனி, அரிவாள்கள் தயாரிக்கக் கூடாது என்று மானாமதுரை டி.எஸ்.பி. வெள்ளைத்துரை உத்தரவிட்டுள்ளார். இதனால் அரிவாள் தயாரிப்பவர்கள் தங்கள் பிழைப்பு போயிற்றே என்ற வருத்தத்தில் உள்ளனர்.

திருப்பாச்சேத்தியில் விலை குறைவாகவும், தரமனதாகவும் அரிவாள் தயாரித்து தரும் பட்டறைகள் அதிகம் உள்ளன. விவசாய வேலைகளுக்கும், கோயில்களில் காணிக்கையாக படைப்பதற்கும் இங்கு அரிவாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. வன்முறை கும்பல்கள் இந்த அரிவாள்களை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து, திருப்பாச்சி அரிவாள்களின் அடையாளமே மாறிப்போனது.

தமிழகத்திலுள்ள ரவுடிகள், கூலிப்படைக் கும்பல்கள் மட்டுமல்லாமல், வெளி மாநில ரவுடி கும்பல்களும் தங்கள் தொழிலுக்கு(!) தகுந்தாற்போல் திருப்பாச்சேத்தியில் ஆர்டர் கொடுத்து அரிவாள்களை செய்ய ஆரம்பித்ததார்கள். இது மட்டுமல்லாமல், திருப்பாச்சேத்தி வட்டாரத்திலுள்ளவர்களும், சின்ன விஷயத்துக்கு கூட அரிவாளை தூக்க ஆரம்பித்தனர்.

##~~##
இந்த நிலையில்தான், மானாமதுரைக்கு டி.எஸ்.பி.யாக வந்ததிலிருந்து, ரவுடியிசத்தை ஒழிப்பதில் தனி கவனம் செலுத்தி வரும் வெள்ளைதுரை வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘ஜாதி கலவரங்களை தடுக்கும் வகையில் திருப்பாச்சேத்தியில் வீச்சரிவாள், வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரிக்க தடை விதிக்கப்படுகிறது. விவசாயத்திற்கு பயன்படும் சாதாரண அரிவாள், பன்னரிவாள் தயாரிக்கலாம். இதை மீறி வன்முறைக்கு பயன்படும் வகையில் ஆயுதங்களை தயாரிப்போர், ஆயுத தடை சட்டத்தால் கைது செய்யப்படுவார்கள்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.
மானாமதுரை டி.எஸ்.பி.யின் இந்த திடீர் உத்தராவல் திருப்பாச்சேத்தியில் அரிவாள் தயாரிப்போர் தங்களது தொழில் பாதிக்கப்படும் என்ற வருத்தத்தில் இருக்கின்றனர்.

செ.சல்மான்