Published:Updated:

மீன் பிடித்தடை காலம் முடிவடைவதால்; தூத்துகுடியில் மீனவர்கள் ஒன்றுகூடி பொதுவிருந்து

Vikatan Correspondent
மீன் பிடித்தடை காலம் முடிவடைவதால்; தூத்துகுடியில் மீனவர்கள் ஒன்றுகூடி பொதுவிருந்து
மீன் பிடித்தடை காலம் முடிவடைவதால்; தூத்துகுடியில் மீனவர்கள் ஒன்றுகூடி பொதுவிருந்து

தூத்துக்குடி: மீன் பிடித்தடை காலம் நாளையுடன் முடிவடைவதால் தூத்துக்குடி மீனவர்கள் இணைந்து பொது விருந்து வைத்தனர்.

மீன் பிடித்தடை காலம் முடிவடைவதால்; தூத்துகுடியில் மீனவர்கள் ஒன்றுகூடி பொதுவிருந்து

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை 45 நாட்கள் மீன் பிடிக்க அரசு தடைவிதிப்பது வழக்கம். இந்த தடைக் காலங்களில் தமிழகம் முழுவதும் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் சுமார் 18,000 விசைப் படகுகள் மற்றும் 12 குதிரைத்திறனுக்கு அதிகமான விசைத்திறன் கொண்ட படகுகள் மற்றும் பெரிய படகுகள் மீன் பிடிக்க அனுமதி இல்லை.

மீன் பிடித்தடை காலம் முடிவடைவதால்; தூத்துகுடியில் மீனவர்கள் ஒன்றுகூடி பொதுவிருந்து

ஆனால், கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகள் மட்டும் சுமார் 20 கி.மீ தொலைவுக்குள்ளாக மீன் பிடிக்க தடை இல்லை. மீன் பிடித்தடைக் காலமான இந்த 45 நாளில், விசைப்படகுகளை சரி செய்தல், மோட்டார் பழுது பார்த்தல், படகிற்கு பெயிண்ட் அடித்தல், வலை பின்னுதல் போன்ற பணிகளை மீனவர்கள் செய்வார்கள்.

மீன் பிடித்தடை காலம் முடிவடைவதால்; தூத்துகுடியில் மீனவர்கள் ஒன்றுகூடி பொதுவிருந்து

மீன் பிடித்தடைக் காலம் முடிவடையும் இறுதி நாளில் மீனவ மக்கள் தங்கள் படகிற்கு மாலை போட்டு, பன்னீர் தெளித்து ஜெபம் செய்து குடும்பமாக சமைத்து உண்ணுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பல மீனவர்கள் இந்த தடைக்காலத்தில் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டனர். மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதையடுத்து அவர்கள் சொந்த ஊரான தூத்துக்குடிக்குத் திரும்பினர்.

##~~##
அனைத்து மீனவ குடும்பங்கள், மீனவ அமைப்புகள், விசைப்படகு மீனவர்கள்அமைப்புகள், கட்டுமர மீனவர்கள் அமைப்புக்கள் என எல்லோரும் ஒன்றுகூடி பீச் ரோட்டில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் சுமார் 700 கிலோ அரிசி சமைத்து சைவ விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்தில் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு உணவருந்தினர்.

இ.கார்த்திகேயன்

படங்கள் : ஏ.சிதம்பரம்