Published:Updated:

`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்

`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்
`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்

`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்

`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்

``எங்க ஊருக்கு 25 வருஷமா சரிவர சாலை வசதி இல்லை. ஆறு மாதங்களுக்கு முன்புதான், அரசுக்கு எங்கமேல இரக்கம் வந்து, எங்க ஊருக்கு சாலைப்போட ரெடி பண்ணினாங்க. ஆனா, பழைய சாலையை பறிச்சு, கப்பியக் கொட்டி வச்சுட்டு, நடந்துகூட போகமுடியாத அளவுக்கு விட்டாங்க. இதுக்கிடையில், எங்க ஊருக்கு ஓட்டுக் கேட்டு தம்பிதுரை வர்றதுக்காக, லைட்டா கப்பிய அமுக்கிவிட்டாங்க. 'ரோடு வந்துரும்'னு சந்தோஷமா இருந்தோம். ஆனா, இன்னைய வரைக்கும் மேற்கொண்டு ரோட்டை போடலை" என்று புலம்பித் தீர்க்கிறார்கள் தெற்கு அய்யம்பாளையம் கிராம மக்கள்.

`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது தெற்கு அய்யம்பாளையம். கரூர் மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக உள்ள இந்த கிராமத்தில், சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு போய்வர ஒரே ஒரு சாலை மட்டுமே உள்ளது. அதுவும், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இங்கு சரிவர சாலை வசதி இல்லை. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, சாலை வசதி செய்ய ஒப்பதல் பெறப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. கடந்த 2015 ம் ஆண்டு கடவூர் முதல் கிழக்கு அய்யம்பாளையம் வரை சாலை புதுப்பிக்கப்பட்டது. பின்னர், நான்கு ஆண்டுகளுக்கு பின், கிழக்கு அய்யம்பாளையத்தில் இருந்து தெற்கு அய்யம்பாளையத்திற்கு சாலை அமைக்க கடந்த 6 மாதங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால், அந்த சாலை வசதி செய்வதில் அரசும், அதிகாரிகளும் மெத்தனம் காட்டுவதாகவும், அதோடு தம்பித்துரை பிரசாரத்திற்காக கிராமத்திற்கு வர லேசாக கப்பியை அமுக்கிவிட்டு, பின்னர் அம்போவென அதிகாரிகள் விட்டுவிட்டதாக புலம்புகிறார்கள். 'மேற்கொண்டு, எந்த பணியும் செய்யவில்லை' என வெடிக்கவும் செய்கிறார்கள்.

`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்

இதுப்பற்றி நம்மிடம் பேசிய இப்பகுதி மக்கள் சிலர், "நாங்கள் இந்த சாலைக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். அதன்பின்புதான், கடந்த ஆறு மாசத்திற்கு முன்பு சாலை போட ரோட்டைப் பறிச்சி, கப்பியக் கொட்டினாங்க. 'இந்த சாலைய போடப்போறாங்க'னு பெருமைப்பட்டோம். தேர்தல் சமயம் பணிகளை முடித்து விடுவார்கள் என எண்ணிணோம். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பிரசாரத்திற்கு வந்த கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி, சாலை மோசமா இருந்ததால், எங்க ஊருக்கு வராம கிழக்கு அய்யம்பாளையத்தோட திரும்பிட்டாங்க. ஆனா, அதன்பின் 2 நாள்களுக்கு பின் வந்த தம்பிதுரை பிரசாரத்திற்கும், எங்ககிட்ட வாக்கு கேட்கவும் எங்க ஊருக்கு வந்தார். அதற்காகம், பறித்த ரோட்டை வேகவேகமாக சமப்படுத்தி, தெற்கு அய்யம்பாளையத்திற்கு தம்பிதுரை வாக்குச் சேகரிக்க வரும் அளவுக்கு வசதி செய்தனர். அதோடு, 'அ.தி.மு.க ஆளுங்கட்சிங்கிறதால, ரெண்டே நாள்ல முழுசாலையையும் போட்டுடுவோம். தம்பிதுரைக்கு ஓட்டு மட்டும் போட்டுருங்க'னு சொன்னாங்க. இரண்டு நாள்கள் பணியும் விறுவிறுனு நடந்துச்சு. ஆனா, அதுக்கப்புறம் கிணத்துல போட்ட கல்லாக சாலை அமைக்கும் பணியை அம்போன்னு விட்டுட்டாங்க. அதுக்கு அப்றம்தான் தெரிஞ்சுச்சு, தம்பிதுரைக்கு நாங்க வாக்கு போடுறதுக்காக அதிகாரிகள் கொடுத்த டிமிக்கி இதுங்கிறது. 

`25 வருஷமா போராடுறோம் ஒண்ணும் நடக்கல!' - சாலை வசதியின்றி பரிதவிக்கும் மக்கள்

இப்ப ஒப்பந்தகாரர கேட்டா, இன்ஜினியர கேளுங்கிறார். இன்ஜினியர கேட்டா, பி.டி.ஒ-வ கேளுங்கிறார். பி.டி.ஒ-வைத் தொடர்புகொள்ள முடியலை. இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சும்மா இருந்த ரோட்டை பறித்து, ரோடு போடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், சமையல் எரிவாயு வண்டிகள் ஊருக்கு வரமுடியவில்லை. நாங்க விளைவிக்கும் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை அய்யலூர், திண்டுக்கல் சந்தைகளுக்கு கொண்டுபோகமுடியவில்லை. ரோடு போடுவாங்கனு நம்பி ஏமாந்துவிட்டோம். 'இப்படி செய்வார்கள்' என முன்பே, தெரிந்திருந்தால் நாங்கள் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்திருப்போம்.

பள்ளிகள் திறக்க 1 மாதமே இருக்கு. பிள்ளைகள் படிக்கப்போக இந்த சாலையை பயன்படுத்த முடியாது. வண்டி வாகனங்களில் போக முடியவில்லை. யாருக்கேனும் உடம்புக்கு முடியலன்னா, ஒரு அவசரத்துக்கு அவங்களை வண்டி, வாகனம் வச்சு ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போகமுடியலை. 15 நாள்களுக்குள் சாலைவசதி ஏற்பாடு செய்யவில்லை என்றால், எங்கள் ஊரில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் தரகம்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம்" என்றார்கள் ஆக்ரோஷமாக.
 

இதுபற்றி, அதிகாரிகள் தரப்பில் கேட்டால்,``தேர்தல் நடைமுறையால் சாலைபோடும் பணி நிறுத்தப்பட்டிருக்கு. தம்பிதுரை ஓட்டு கேட்டு தெற்கு அய்யம்பாளையத்திற்கு போனதற்கும், இந்த சாலைக்கும் சம்பந்தமில்லை. விரைவில் சாலைப்பணிகள் முடிவடையும்" என்றார்கள்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு