Published:Updated:

தெற்கு வாசல் திறக்கபடுமா?; காத்திருக்கும் பக்தர்கள்

தெற்கு வாசல் திறக்கபடுமா?; காத்திருக்கும் பக்தர்கள்
தெற்கு வாசல் திறக்கபடுமா?; காத்திருக்கும் பக்தர்கள்
தெற்கு வாசல் திறக்கபடுமா?; காத்திருக்கும் பக்தர்கள்

திருச்சி: திருவானைகாவல் ஜெம்புகேஸ்வரர் திருக்கோவில் தெற்கு வாசல் திடீரென மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக திருவானைகாவல் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர், வெளி நாடுகளில் இருந்து வருகிறார்கள்.

இக்கோவிலில் ஜெம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதியின் தெற்கு வாசலில் குபேரலிங்கம் சன்னதி உள்ளது. வரலாற்றுப்பெருமை வாய்ந்த ஈசனைக்காண தினமும் பக்தர்கள் தெற்கு வாசல் வழியாக வந்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த இரு நாட்களாக தெற்கு வாசல் திடீரென எந்தவித அறிவிப்பும் இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

##~~##
பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ஆம் தேதி மட்டுமே இந்த வாசல் மூடப்படுவது வழக்கம். தெற்கு வாசல் திடீரென மூடப்பட்டிருப்பது குறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டால் எவரும் பதிலளிக்க முன்வரவில்லை.
ப்ரீத்தி கார்த்திக்