Published:Updated:

ரூ.100 கோடி மோசடி: நகைகடை அதிபர்கள் மீது 3வது நாளாக குவியும் புகார்

விகடன் விமர்சனக்குழு
ரூ.100 கோடி மோசடி: நகைகடை அதிபர்கள் மீது 3வது நாளாக குவியும் புகார்
ரூ.100 கோடி மோசடி: நகைகடை அதிபர்கள் மீது 3வது நாளாக குவியும் புகார்

கோவை: கோவையில் ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்த நகை கடை உரிமையாளர்கள் இருவர் மீது பொதுமக்கள் மூன்றாவது நாளாக காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.

கோவை கிராஸ்கட் வீதியில் சொர்ணலட்சுமி ஜுவல்லரி என்ற நகை கடை நடத்தி வருபவர்கள் அசோக் குமார், பாலாஜி சகோதரர்கள். இவர்கள் தங்க நகை வியாபாரிகளிடம் வாங்கிய பலகோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணங்களுடன் கடந்த திங்கட்கிழமை தலைமறைவாகினர். இது தொடர்பாக காந்திபுரம், காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிலும் 60 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டு பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி விட்டதாக வங்கியின் மேலாளர் சித்தார்த் ரெட்டி புகார் அளித்துள்ளார். அதேபோல், சொர்ணலட்சுமி ஜுவல்லரியில் நகை சீட்டு நடத்தி ஆயிரக்கணக்கானோரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பதாக, ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் இன்றும் 50க்கும் மேற்பட்டோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காட்டூர் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நகை கடை அதிபர்களை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்படையினர் பெங்களூருவிலும், மற்றறொரு குழுவினர் கேரளாவில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-ச.ஜெ.ரவி