Published:Updated:

`இனி வனத்துறை அலுவலகத்தில்தான் வாழ வேண்டும்!’ - யானைகள் நடமாட்டத்தால் மலைவாழ் மக்கள் அச்சம்

`இனி வனத்துறை அலுவலகத்தில்தான் வாழ வேண்டும்!’ - யானைகள் நடமாட்டத்தால் மலைவாழ் மக்கள் அச்சம்
`இனி வனத்துறை அலுவலகத்தில்தான் வாழ வேண்டும்!’ - யானைகள் நடமாட்டத்தால் மலைவாழ் மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலைவாழ் மக்களின் கிராமங்களில், குடும்பமாக ஐந்து யானைகள் உலவுவதாக மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

`இனி வனத்துறை அலுவலகத்தில்தான் வாழ வேண்டும்!’ - யானைகள் நடமாட்டத்தால் மலைவாழ் மக்கள் அச்சம்

கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையோரம் பம்பகோடு, விளாமலை, குற்றியாறு, கோதையாறு உட்பட 48 ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளில், அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதி உள்ளது. மேலும், பழங்குடியின மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் உள்ளன. இங்கு, ஒரு தாய் யானையும், நான்கு குட்டி யானைகளும் சுற்றித்திரிவதாகப் பழங்குடியின மக்கள் கூறுகிறார்கள். மலைவாழ் மக்களின் வாழை, மரவள்ளிக் கிழங்கு, பயறு வகைகளை யானைகள் அழித்து நாசம் செய்கின்றன. பயிர்களுக்குத் தண்ணீர் எடுத்துச்செல்லும் கிணறுகளையும் சேதப்படுத்தியுள்ளன. இதுகுறித்து வனத்துறைக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

​​

`இனி வனத்துறை அலுவலகத்தில்தான் வாழ வேண்டும்!’ - யானைகள் நடமாட்டத்தால் மலைவாழ் மக்கள் அச்சம்

இதுகுறித்து பேச்சிப்பாறை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ராஜன் கூறுகையில், "யானைகள் குடும்பத்துடன் உலாவுவதாக நாங்கள் புகார் தெரிவித்தோம். ஒருமுறை மட்டும் வனத்துறையினர் வந்து யானைகளைக் காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். யானைகள் காட்டுக்குள் செல்லவில்லை. அதன்பிறகு, வனத்துறையினர் கண்டுகொள்ளவில்லை. அவ்வப்போது கிராமத்துக்குள் யானை புகுவதால் , பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களும் பழங்குடியினரும் மிகவும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர். 

`இனி வனத்துறை அலுவலகத்தில்தான் வாழ வேண்டும்!’ - யானைகள் நடமாட்டத்தால் மலைவாழ் மக்கள் அச்சம்

சிலர், வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். சில இடங்களில் பட்டாசு வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வனத்துறை உடனடியாக யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பழங்குடியின மக்கள் தங்கள் கோழி, ஆடு, நாய் போன்ற செல்லப் பிராணிகளையும், தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் தஞ்சம் புகும் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார்.