Published:Updated:

இரட்டை டம்ளர் முறை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கோவை கலெக்டருக்கு எதிராக போராட்டம்

கோவை: கோவை மாவட்ட கிராமங்களில் நிலவும் இரட்டை குவளை மீது நடவடிக்கை எடுக்காத  கோவை மாவட்ட ஆட்சியர் கருணாகரனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட திராவிடர் விடுதலை கழகத்தினர் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
இரட்டை டம்ளர் முறை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கோவை கலெக்டருக்கு எதிராக போராட்டம்

கோவை மாவட்ட கிராமங்களில் இரட்டை குவளை முறையும் தீண்டாமை கொடுமையும் நடைபெற்றுவருவதாக மாவட்ட நிர்வாகத்திடம் திராவிடர் விடுதலை கழகத்தினர் பல முறை மனு அளித்தும் எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாவட்டத்தில் நிலவும் இரட்டை குவளை முறையை தடுக்காத மாவட்டஆட்சியர் கருணாகரன் மீதும் காவல் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அந்த அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது கோவை மாவட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் தாமோதரனின் சொந்த ஊரான கிராமம் நல்லிகவுண்டம் பாளையம், மெட்டுவாவி, பணப்பட்டி, கொண்டம்பட்டி முதல் சுமார் 35 கிராமங்களில் இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதாகவும் இது குறித்து பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார்.
 
இரட்டை டம்ளர் முறை ஒழிக்க நடவடிக்கை எடுக்காத கோவை கலெக்டருக்கு எதிராக போராட்டம்

மேலும் தீண்டாமை கொடுமை குறித்து புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

தீண்டாமை கொடுமை மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டகாரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டகாரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

காவல் துறையினரின் தடுப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை போராட்டகாரர்கள் முற்றுகையிட முயன்றதால் அலுவலக கதவுகளை காவல் துறையினர் இழுத்து பூட்டினர். இதனை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட அந்த அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 210 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த முற்றுகை போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ச.ஜெ.ரவி

அடுத்த கட்டுரைக்கு