Published:Updated:

சென்னையிலும் இனி 'கட்'.. தமிழகம் முழுவதும் மின்வெட்டு 3 மணி நேரமாக அதிகரிப்பு

விகடன் விமர்சனக்குழு

சென்னை, பிப்.21,2011

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்கள் அனைத்திலும் இனி தினமும் 3 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ##~~##

அண்மைக்காலமாக இப்பிரச்னை இல்லாமல் இருந்த சென்னை நகரத்திலும் இனி தினமும் ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மின் பற்றாக்குறை என்பது தமிழ்நாடு போன்ற ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இருந்து வந்ததற்கு மாறாக, தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் மின் பற்றாக்குறையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்த மாநிலங்களிலிருந்தும் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தைப் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

வேறு வழியின்றி வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் நாள் ஒன்றுக்கு தற்போது 2 மணி நேரம் மின்வெட்டு என்பதற்குப் பதிலாக பகலில் 3 மணி நேரமும், சென்னை மாநகரில் மின்வெட்டு செய்யப்படாமலிருந்த நிலைக்கு மாறாக ஒரு மணி நேரம் மின் வெட்டு செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.