Published:Updated:

அட்டை பெட்டியில் வைத்து முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை

அட்டை பெட்டியில் வைத்து முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை
அட்டை பெட்டியில் வைத்து முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை
அட்டை பெட்டியில் வைத்து முட்புதரில் வீசப்பட்ட பெண் குழந்தை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அட்டை பெட்டியில் பெண் குழந்தையை வைத்து முட்புதரில் வீசப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி தாளமுத்து நகரில் உள்ள முட்செடிகள் நிறைந்த பகுதியில் ரத்தக்கறை படிந்த ஒரு அட்டை பெட்டியின் அருகே நாய்கள் சூழ்ந்து கொண்டு உருட்டி மோப்பம் பிடித்துக் கொண்டுருந்தது. அதேவேளையில் அந்த வழியாக நடந்து சென்றவர்களுக்கு லேசான துர்நாற்றம் வீசியுள்ளது. இதில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள்தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

##~~##
உடனே, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அட்டைப் பெட்டியைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் பிறந்து இரண்டு நாட்களே ஆன பெண் குழந்தையின் உடல் இருந்தது. மேலும், அக்குழந்தையின் உடல், இரு கால்கள் மற்றும் ஒரு கையை நாய்கள் கடித்திருந்தது. கைப்பற்றிய குழந்தையின் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.
மேலும், பிறந்தது பெண் குழந்தையாக இருப்பதால் அதனை விரும்பாமல் கொலை செய்து முட்புதரில் வீசினார்களா? அல்லது தவறான உறவில் பிறந்த குழந்தையா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ.கார்த்திகேயன்