Published:Updated:

மூடப்பட்ட டாக் தொழிற்சாலை விரைவில் திறப்பு!

Vikatan Correspondent
மூடப்பட்ட டாக் தொழிற்சாலை விரைவில் திறப்பு!
மூடப்பட்ட டாக் தொழிற்சாலை விரைவில் திறப்பு!
மூடப்பட்ட டாக் தொழிற்சாலை விரைவில் திறப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் மூடப்பட்ட 'டாக்' தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்ட உள்ளது.

தூத்துக்குடியில் உள்ள 'டாக்'  தொழிற்சாலை, சிட்கோ மூலம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆரால் 1978 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.

1991 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 'டாக்'  பங்குகள் முழுவதும் விலக்கிக் கொள்ளப்பட்டு ஸ்பிக் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு, அரசு உதவி நிறுத்தப்பட்டதும் 'டாக்' ஆலை தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இங்கு, உப்பை மூலதனமாகக் கொண்டு ‘‘சோடா ஆஷ்’’, ‘‘அமோனியம் குளோரைடு’’, ‘‘சோடியம் பை கார்பனேட்’’ மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், 143 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கடந்த ஏப்ரல் மாதம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கடந்த மே 27 ஆம் தேதி, மூலக்கூறுகள் பற்றாக்குறையாலும், தொழிற்சாலையில் உள்ள கட்டடங்கள் அதிக பழுதாக இருப்பதாலும் தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி ஆலை மூடப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

##~~##
ஆலை மூடப்பட்டதை கண்டித்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆலை முன்பு உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர். ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்கிட வேண்டும், டாக் ஆலையை அரசே ஏற்று நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களையும் நடத்தினார்கள். இவர்களுக்கு ஆதரவாக பல தொழிற் சங்கங்களும், சமூக அமைப்புகளும் போராட்டங்களை நடத்தியது.
இதையடுத்து, ஆலை தரப்புடன் பல முறை நடத்தப்பட்ட பேசுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில், நேற்று 'டாக்' ஆலை தலைமை நிர்வாகி பரமேஸ்வரன் தலைமையில், ஆலையின் தொழிற் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில், ஆலையை மீண்டும் திறக்க நிர்வாகம் உறுதியளித்தது. இதையடுத்து, 'டாக்'  தொழிற்சாலை இன்னும் ஓரிரு நாளில் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இ.கார்த்திகேயன்